search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் தடுக்கும் சக்தி எது? பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி
    X

    பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவிடாமல் தடுக்கும் சக்தி எது? பிடிஆர் விமர்சனத்திற்கு அண்ணாமலை பதிலடி

    • 200 நாட்களாக விலை குறைக்கப்படாமல் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது
    • சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதாக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியிருந்தார்.

    சென்னை:

    இந்தியாவில் பெட்ரோல்-டீசல் விலையை சர்வதேச சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப எண்ணெய் நிறுவனங்களே மாற்றியமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுவாக கச்சா எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் அதற்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலை உயரும். ஆனால் கச்சா எண்ணெய் விலை குறைந்தால் அந்த அளவுக்கு பெட்ரோல், டீசல் விலை குறைவது இல்லை.

    கச்சா எண்ணெய் விலை வேகமாக சரிந்தாலும் கூட, பெரிய அளவில் விலை குறைக்கப்படவில்லை. அந்த வகையில் 200 நாட்களாக விலையை குறைக்காமல் ஒரே விலையில் விற்பனை செய்யப்படுகிறது. 200 நாட்களாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.94.24 ஆகவும் உள்ளது.

    இதனை தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுட்டிக்காட்டி விமர்சனம் செய்துள்ளார். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும் இந்தியாவில் பெட்ரோல்/ டீசல் விலை அதற்கு இணையாக குறையாமல் இருக்கிறது. இந்தியாவில் சில சக்திகள் விலையை குறைக்க விடாமல் செய்வதுபோல உள்ளது, என்று அவர் கூறி உள்ளார்.

    இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பதிலடி கொடுத்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றாதோர் எரிபொருள் விலை குறையவில்லை என்று வருத்தப்படுவது ஏன்? என கேள்வி எழுப்பி உள்ளார்.

    பெட்ரோல் லிட்டருக்கு ₹2 மற்றும் டீசல் லிட்டருக்கு ₹4 குறைத்து வாக்குறுதியை நிறைவேற்றினால் விலை தாமாக குறையும், ஆனால், விலையை குறைக்கவிடாமல் தமிழகத்தில் ஒரு அந்நிய சக்தி தடுத்து வருகிறது என்றும் அண்ணாமலை பதிவிட்டுள்ளார்.

    Next Story
    ×