என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
அயோத்தி கோவிலில் ராமருக்கு அணிவிப்பதற்கு பட்டு வஸ்திரங்கள்: பிரதமரிடம் வழங்கிய பட்டர்கள்
- பிரதமர் மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
- அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம்.
திருச்சி:
அயோத்தியில் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் உள்ள கோவில்களில் சாமி தரிசனம் செய்தார்.
நேற்று ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலை வந்தடைந்த பிரதமர் மோடிக்கு, சுந்தர் பட்டர் தலைமையில் தங்க குடத்துடன் கூடிய பூர்ண கும்ப மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து முக்கிய சன்னதிகளில் சாமி தரிசனம் செய்த அவர், கம்பராமாயணத்தின் பாராயணம் கேட்டு மகிழ்ந்தார்.
அதன் பின்னர் தீபக் (எ) ராகவ் பட்டர், ஸ்தானிகர்கள் ரங்கராஜன், கோவிந்தராஜன் ஆகியோர் பிரதமர் நரேந்திர மோடியிடம், அயோத்தி ராமர் கோவிலுக்கான பட்டு வஸ்திரங்கள் கோவில் சார்பில் வழங்கினர்.
இதுதொடர்பாக, கோவிந்தராஜன் கூறுகையில்:-
அயோத்தியில் உள்ள கோவிலில் ராமர், லட்சுமணன், சீதா பிராட்டிக்கு அணிவிப்பதற்குத் தேவையான பட்டு ஆடைகளை பிரதமரிடம் வழங்கினோம். அதனை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட பிரதமர் அயோத்திக்குக் கொண்டு செல்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.