search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    vijay - vijayatharani - rahulgandhi
    X

    விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு காரணமே ராகுல்காந்தி தான் - விஜயதரணி

    • காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை என விஜயதரணி ஆதங்கம்
    • விஜயதரணியின் இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.

    தமிழகம் மீட்போம், தளராது உழைப்போம்" என்ற தலைப்பில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

    அப்போது பொதுக்கூட்ட மேடையில் பேசிய பாஜக பிரமுகர் விஜயதரணி, "நான் 3 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, இரண்டரை ஆண்டுக்காலம் பதவி இருந்தும், இருக்கின்ற பதவியையும் விட்டுவிட்டு பாஜகவில் இணைந்துள்ளேன். அதற்காக எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வரவில்லை, எதிர்பார்ப்போடுதான் வந்துள்ளேன்.

    தற்போது காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் சேர்ந்து 6 மாதமாகி விட்டது. இன்னும் பதவி கொடுக்கவில்லை. எனக்கு நல்லது பண்ணுவீங்க என தெரியும். என்னை போன்றவர்களை பாஜக நிச்சயம் பயன்படுத்தும். என்ன அண்ணே சரிதானே? என அண்ணாமலையைப் பார்த்து விஜயதரணி கேட்டார்.

    விஜயதரணியின் இந்த பேச்சு பாஜக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், விஜய் கட்சி ஆரம்பித்ததற்கு காரணமே ராகுல்காந்தி தான் என்று புதிய தகவல் ஒன்றை விஜயதரணி தெரிவித்துள்ளார்.

    தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அவர், "நடிகர் விஜய், ராகுல்காந்தியிடம் காங்கிரஸ் கட்சியில் பொறுப்பு கேட்டார். உங்கள் செல்வாக்கிற்கு தனிக் கட்சியே தொடங்கலாம் என ராகுல் காந்தி யோசனை கொடுத்தார். அதன் விளைவாக தான் தற்போது விஜய் கட்சி ஆரம்பித்துள்ளார். அதனால் காங்கிரஸ் கட்சியுடன் அவர் இணக்கமாக போவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஆனால் அவர் யாருடன் கூட்டணி அமைக்க போகிறார். யாரை எதிர்க்கப் போகிறார் என்பதை பொறுத்து இங்கு அரசியல் மாற்றங்கள் நிகழும்" என்று தெரிவித்தார்.

    Next Story
    ×