என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சாலைகளில் கேட்பாரற்று நிற்கும் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்களை ஏலம் விட முடிவு
- கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,310 வாகனங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது.
- தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளது.
சென்னை:
சென்னையில் பல்வேறு பகுதிகளில் கேட்பாரற்று நீண்ட காலமாக வாகனங்கள் கிடக்கின்றன. சாலைகள், முக்கிய தெருக்களில் கார், ஆட்டோ, இரு சக்கர வாகனங்கள் யாரும் சொந்தம் கொண்டாடாமல் கேட்பாரற்று கிடக்கின்றன.
இது அந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறாக இருப்பதோடு சுகாதார சீர்கேட்டையும் ஏற்படுத்துகிறது. மழையிலும், வெயிலிலும் அந்த வாகனங்கள் சேதமாகி ஒன்றுக்கும் பயன்படாத வகையில் வீணாகி பொதுமக்களுக்கு இடையூறாக உள்ளது.
சாலையோரங்களில் துருப்பிடித்து வீணாக கிடக்கும் அந்த வாகனங்களை அகற்றி ஏலம் விட மாநகராட்சி திட்டமிட்டு
உள்ளது.
கேட்பாரற்று கிடக்கும் இந்த வாகனங்களில் ஏதேனும் குற்றச்செயல்களுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்க்க போலீசாரின் அனுமதி கேட்டு இருப்பதாக மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன் தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில் இந்த வாகனங்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் அகற்றப்படும். ஒவ்வொரு வாகனத்தையும் அகற்ற ஒப்பந்ததாரருக்கு பணம் செலுத்தப்படும். அகற்றப்படும் வாகனங்கள் ஏலம் விடுவதற்கான கொள்கை வகுக்கப்படுகிறது.
கடந்த பிப்ரவரி மாதத்தில் 1,310 வாகனங்கள் அகற்றுவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளது. இவற்றில் 327 வாகனங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்வு வரை இந்த பணி நடந்தது. அதன் பின்னர் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. கேட்பாரற்று நிற்கும் வாகனங்களை இழுத்து செல்ல நகரம் முழுவதும் பணியாளர்களை பயன்படுத்தும் ஒப்பந்ததாரரை பணியமர்த்துவதற்கு டெண்டர் வழங்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
சென்னையில் கேட்பாரற்று கிடக்கும் வாகனங்களில் 80 சதவீதம் 4 சக்கர வாகனங்கள், 3 சக்கர வாகனங்கள் 10 சதவீதம், மீதமுள்ளவை இரு சக்கர வாகனங்கள் என்று கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. நம்பர் பிளேட் இல்லாத 10 வாகனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
தென் சென்னையில் 395, வட சென்னையில் 271, மத்திய பகுதியில் 644 வாகனங்கள் கேட்பாரற்று உள்ளது. கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பெருங்குடி குப்பை கிடங்கு, மணலியில் சாத்தாங்காடு லாரி ஷெட், முல்லை நகர் மயானம், ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கம் உள்ளிட்ட 10 இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்