search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்- நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்
    X

    ரூ.4 கோடி பணம் பறிமுதல் விவகாரம்- நயினார் நாகேந்திரனுக்கு சிபிசிஐடி சம்மன்

    • விசாரணையில் தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பண பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்தனர்.
    • நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    சென்னை:

    சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி நெல்லை பாராளுமன்ற தொகுதி வேட்பாளராக பா.ஜ.க. சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு சொந்தமான சென்னையில் உள்ள ஓட்டலில் பணிபுரியும் ஊழியர்கள் சிலரிடம் ரூ.4 கோடி பணம் சிக்கியது.

    இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் தேர்தலில் நயினார் நாகேந்திரனுக்கு ஆதரவாக பண பட்டுவாடா செய்வதற்காக கொண்டு செல்வதாக வாக்குமூலம் அளித்தனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு தற்போது அவருக்கு சி.பி.சி.ஐ.டி. போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர்.

    இந்த விவகாரம் தொடர்பாக பா.ஜனதா அமைப்புச்செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு கோவர்தன் மற்றும் நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கும் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு வருகிற 31-ந்தேதி சென்னையில் உள்ள சி.பி.சி.ஐ.டி. அலுவலகத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளிக்குமாறு நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வுக்கு அனுப்பப்பட்டுள்ள சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×