search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சந்திரயான்-3 சாதனை திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்
    X

    சந்திரயான்-3 சாதனை திட்டத்தின் பின்னணியில் இருக்கும் விஞ்ஞானிகள்

    • சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தொடர்ந்து தமிழர்கள் இருந்து வருகின்றனர்.
    • சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரா எனப்படும் பி.வீரமுத்துவேல்.

    உலக நாடுகள் வியக்கும் வகையில் இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சிகள் அபரிமிதமான வளர்ச்சி அடைந்ததற்கு தமிழர்கள் மிக முக்கிய பங்கு வகித்துள்ளனர். பூமியில் இருந்து நிலவுக்கு சந்திரயான், செவ்வாய் கிரகத்திற்கு மங்கள்யான் போன்ற விண்கலத்தை செலுத்தி உலக நாடுகளை வியக்க வைத்து வருகிறது இஸ்ரோ. சந்திரயான் விண்கலத்தின் திட்ட இயக்குனர்களாக தொடர்ந்து தமிழர்கள் இருந்து வருகின்றனர்.

    உலக அரங்கில் நம் நாட்டுக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தையும், தனி மரியாதையையும் ஏற்படுத்த இருக்கும் சந்திரயான் -3 திட்டத்தின் இயக்குனராக தமிழர் வீரா என்ற வீரமுத்துவேல் உள்ளார்.

    சந்திரயான்-3 திட்டத்தின் பின்னணியில் முக்கிய விஞ்ஞானிகள் உள்ளனர். அவர்கள் குறித்த விவரம் வருமாறு:-

    எஸ். சோம்நாத் (இஸ்ரோ தலைவர்)

    சந்திரயான்-3 விண்கலத்தின் நிலவு பயணத்திற்கு முதன்மையாக செயல்பட்டவர் விஞ்ஞானி எஸ்.சோம்நாத். இவர் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். ஏற்கனவே இவர் விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் மற்றும் திரவ உந்து அமைப்பு மையத்தின் இயக்குனராக பணியாற்றினார். சந்திரயான்-3 மட்டுமின்றி ஆதித்யா-எல்1 முதல் சூரியன் மற்றும் ககன்யான் (இந்தியாவின் முதல் ஆளில்லாப் பயணம்) போன்ற திட்டங்களுக்கும் பொறுப்பாக இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பி. வீரமுத்துவேல் (சந்திரயான்-3 திட்ட இயக்குனர்)

    சந்திரயான்-3 திட்டத்தின் முக்கிய பங்காற்றிய விஞ்ஞானி வீரா எனப்படும் பி.வீரமுத்துவேல். தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர். ரெயில்வே ஊழியர் பழனிவேல் என்பவரின் மகனான இவர் சந்திரயான்-3 திட்ட இயக்குனர் ஆவார். முன்பு இவர் இஸ்ரோவின் விண்வெளி உள்கட்டமைப்பு திட்ட அலுவலகத்தின் துணை இயக்குனராக பணியாற்றினார். தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் சேர்ந்து பொறியியல் படிப்பை முடித்து, பின்னர் உயர் படிப்பிற்காக சென்னை ஐ.ஐ.டி.யில் சேர்ந்து அங்கு ஏரோ ஸ்பேஸ் துறையில் முக்கிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ளார்.

    எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர் (விக்ரம் சாராபாய் விண்வெளி மைய இயக்குனர்)

    கேரளாவின் திருவனந்தபுரத்தில் தும்பாவிற்கு அருகில் உள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனர் எஸ். உன்னிகிருஷ்ணன் நாயர். இவர் ஜியோசின்க்ரோனஸ் செயற்கைக்கோள் ஏவு வாகனம் (ஜி.எஸ்.எல்.வி.) மார்க்-III ஐ உருவாக்கியதில் பங்காற்றி உள்ளார். பின்னர் ஏவு வாகனம் மார்க்-III என மறுபெயரிடப்பட்டது. சந்திரயான் -3 விண்வெளி பயணத்துக்கு இவரும் முக்கிய பங்காற்றியுள்ளார்.

    எம். சங்கரன் (யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர்)

    யு.ஆர். ராவ் செயற்கைக்கோள் மைய இயக்குநர் எம்.சங்கரன் தற்போது தகவல் தொடர்பு, வழிசெலுத்தல், தொலைநிலை உணர்தல், வானிலை முன்னறிவிப்பு மற்றும் கிரக ஆய்வு ஆகியவற்றில் நாட்டின் தேவைகளைப் பூர்த்தி செய்ய செயற்கைக்கோள்களை உருவாக்கும் குழுவின் தலைவராக உள்ளார். இந்தியாவின் அனைத்து செயற்கைக்கோள்களும் இஸ்ரோவுக்காக இந்த மையத்தில் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்படுகின்றன.

    ஏ. ராஜராஜன் (வெளியீட்டு அங்கீகார வாரிய தலைவர்)

    ஏ.ராஜராஜன் ஒரு புகழ்பெற்ற விஞ்ஞானி ஆவார். அவர் ஸ்ரீஹரிகோட்டாவின் முக்கிய விண்வெளி துறைமுகமான சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் இயக்குநராக பணியாற்றுகிறார். அவர் லேப் இன் தலைவராகவும் உள்ளார். ககன்யான் மற்றும் எஸ்.எஸ்.எல்.வி உள்ளிட்ட இஸ்ரோவின் விரிவடையும் ஏவுகணை தேவைகளுக்கு திடமான மோட்டார்கள் மற்றும் ஏவுகணை உள்கட்டமைப்பு தயாராக இருப்பதை அவர் உறுதி செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    இவர்களைத் தவிர, சந்திரயான்-3 குழுவில் இயக்குநர் மோகன் குமார் மற்றும் வாகன இயக்குநர் பிஜு சி தாமஸ் ஆகியோர் அடங்குவர். இவர்களுடன் சுமார் 54 பெண் பொறியாளர்கள், விஞ்ஞானிகள் நேரடியாக பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    Next Story
    ×