search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சென்னை தி.நகரில் வாடகை செலுத்தாத 43 கடைகளுக்கு சீல் வைப்பு
    X

    சென்னை தி.நகரில் வாடகை செலுத்தாத 43 கடைகளுக்கு சீல் வைப்பு

    • பல்வேறு கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் 4 வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.
    • வாடகை பாக்கியாக ரூ.90 லட்சம் நிலுவையில் உள்ளது.

    சென்னை:

    சென்னை மாநகராட்சிக்கு சொத்துவரி, தொழில் வரி செலுத்தாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு சில முக்கிய வர்த்தக பிரமுகர்கள் லட்சக்கணக்கில் சொத்துவரி பாக்கி வைத்துள்ளனர். அவர்களுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.

    ஆனாலும் அவர்கள் சொத்துவரியை செலுத்தவில்லை. இதையடுத்து மண்டலம் 10-க்குட்பட்ட தி.நகர் ரெங்கநாதன் தெருவில் உள்ள 2 கடைகளுக்கு இன்று காலை சீல் வைக்கப்பட்டது. டாக்டர் நாயர் ரோட்டில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்சில் 43 கடைகள் உள்ளன. டீ கடை, பேக்கரி உள்ளிட்ட பல்வேறு கடைகளை நடத்தி வரும் வியாபாரிகள் 4 வருடமாக வாடகை செலுத்தாமல் இருந்தனர்.

    வாடகை பாக்கியாக ரூ.90 லட்சம் நிலுவையில் உள்ளது. அதனை செலுத்த நோட்டீஸ் கொடுத்தும் கண்டு கொள்ளவில்லை. இதனால் 43 கடைகளையும் இன்று பூட்டி சீல் வைத்தனர்.

    இதே போல பனகல் பார்க் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் உள்ளது. அதில் 57 கடைகள் செயல்பட்டு வருகின்றன. அவற்றின் மூலம் 2 கோடியே 25 லட்சம் வாடகை பாக்கி உள்ளது. அந்த கடைகளுக்கு மாநகராட்சி வருவாய் அதிகாரிகள் நோட்டீஸ் வினியோகித்தனர். அடுத்த வாரம் இந்த கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×