என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாங்கள் யாரும் பிரியவில்லை, ஒன்றாக இணைந்திருக்கிறோம்- செங்கோட்டையன்
- எடப்பாடி தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும்போது இந்தியாவே திரும்பி பார்க்க இருக்கிறது.
- ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது.
ஈரோடு:
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக தேர்தல் பணிக்குழு கூட்டம் கருங்கல்பாளையம் பகுதியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் முன்னிலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
எடப்பாடி தலைமையில் வெற்றி என்ற இலக்கை கிழக்கு தொகுதி அடையும்போது இந்தியாவே திரும்பி பார்க்க இருக்கிறது.
மேலும் அனைவரும் இந்த இயக்கம் பிரிந்து இருக்கிறது என சொல்கிறார்கள். பிரிந்தவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்று தேடிப்பார்க்கின்ற அளவிற்கு இந்த இயக்கம் இருக்கிறது. நாங்கள் யாரும் பிரியவில்லை ஒன்றாக இணைந்திருக்கிறோம். ஒன்றாகவே இணைந்து பணிகளை செய்து வருகிறோம் என்பதற்கு இந்த தேர்தல் களம் அமைந்துள்ளது.
தென் மாநிலமான தமிழகத்தில் தேர்தல் நடக்க உள்ளது. ஈரோடு அ.தி.மு.க.வின் எக்கு கோட்டை. இதை எவராலும் தகர்க்க முடியாது. கழகம் எப்படி பணியாற்றுகிறது என்பதை களப்பணிகளில் பார்த்துக் கொண்டிருக்கிறோம். 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட தென்னரசு ஒருமனதாக வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறார்.
இவ்வாறு அவர் கூறினார்.