search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: மேகமூட்டத்தால் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்
    X

    வானில் ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: மேகமூட்டத்தால் பார்க்க முடியாமல் மக்கள் ஏமாற்றம்

    • வானில் 8 கோள்களும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன.
    • சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழையும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

    சென்னை:

    வானில் கிழக்கு திசையில் நேற்று காலை சூரிய உதயத்துக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அடி வானில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ் (வருணன்), செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி (சார்டுன்) என்ற வரிசையில், 6 கோள்கள் ஒரே நேர்கோட்டில் வருவதை பூமியில் இருந்து பார்க்கலாம். இதில் யுரேனஸ், நெப்டியூன், புதன் சற்று தூரமாக இருப்பதால் இதனை பார்ப்பது கடினம். வானம் தெளிவாக இருந்தால் கடற்கரை பகுதிகளில் பார்க்க முயற்சிக்கலாம் என்று வானியல் விஞ்ஞானிகள் அறிவித்து இருந்தனர்.

    இந்த அபூர்வ நிகழ்வை பார்ப்பதற்காக சென்னை மாநகரில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நேற்று காலை 4 மணி அளவில் தூக்கத்தில் இருந்து எழுந்து மொட்டை மாடியில் சென்று வானை பார்த்தனர். ஆனால் சென்னையில் ஒரு சில பகுதிகளில் மழையும், ஒரு சில பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. இதனால் நிலாவும் அதன் அருகில் செவ்வாய் கோளும் இருப்பதை மட்டும் காணமுடிந்தது. வேறு எந்த கோள்களையும் பொதுமக்களால் பார்க்க முடியவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்தனர்.

    வானில் புதன், வெள்ளி, பூமி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் என்ற 8 கோள்களும் அதற்குரிய கோணத்தில் சூரியனை நீள்வட்டப்பாதையில் சுற்றி வருகின்றன. இந்த நிலையில், வியாழன் (ஜூபீடர்), புதன் (மெர்குரி), யுரேனஸ் (வருணன்), செவ்வாய் (மார்ஸ்), நெப்டியூன், சனி (சார்டுன்) ஆகியவை நேற்று காலை சூரிய உதயத்திற்கு ஒரு மணிநேரத்துக்கு முன்பு நேர்கோட்டில் வரும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் சென்னை மற்றும் புதுச்சேரியில் பல இடங்களில் மேகமூட்டமும், ஒரு சில இடங்களில் மழையும் பெய்தததால் பொதுமக்களால் பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

    இதேபோன்ற நிகழ்வு வருகிற ஆகஸ்டு 28-ந்தேதி, 2025-ம் ஆண்டு ஜனவரி 18, பிப்ரவரி 28, ஆகஸ்டு 29 ஆகிய தேதிகளில் தெரியும். அதேபோல், 2025-ம் ஆண்டு பிப்ரவரி 28-ந் தேதி 7 கோள்களையும் பூமியில் இருந்து பார்க்கலாம். இதனை ஆபூர்வ நிகழ்வாக பார்க்கப்படுகிறது' என்று சென்னை பிர்லா கோளரங்க இயக்குனர் லெனின் தமிழ்கோவன் கூறினார்.

    Next Story
    ×