என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னை மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகள் இணைப்பு- வெளியான புது தகவல்
- மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரெயில்வே ஆய்வு செய்தது
- ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏசி பெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
சென்னை:
சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதில் மின்சார ரெயில் சேவை முக்கிய பங்காற்றுகிறது. அந்த வகையில், தெற்கு ரெயில்வேயின் சென்னை ரெயில்வே கோட்டத்தின் கீழ் மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது. தினமும் 600-க்கும் மேற்பட்ட சேவைகள் நடைபெறுகிறது. பயணிகளின் வசதி மற்றும் கோரிக்கைக்கு ஏற்ப புதிய திட்டங்களை ரெயில்வே நிர்வாகம் அறிமுகம் செய்து வருகிறது.
இதற்கிடையே, கோடை காலத்தில், மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க வேண்டும் என பயணிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். தொடர்ந்து, சென்னை புறநகர் மின்சார ரெயில்களில் ஏசி ரெயில் பெட்டியை இணைப்பது குறித்து ஆய்வு செய்யுமாறு தெற்கு ரெயில்வேக்கு சென்னை ஒருங்கிணைந்த போக்குவரத்து குழுமம் பரிந்துரை செய்திருந்தது.
எனவே, மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைப்பதற்கான சாத்தியக்கூறுகளை தெற்கு ரெயில்வே ஆய்வு செய்தது. பின்னர், ஏசி பெட்டிகளை இணைக்க முடிவு செய்து பெட்டிகளை தயாரிப்பதற்கான பணியை தெற்கு ரெயில்வே தொடங்கியது. பெரம்பூரில் உள்ள ஒருங்கிணைந்த ரெயில் பெட்டி தொழிற்சாலையில் (ஐசிஎப்) ஏசி ரெயில் பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
சென்னை ரெயில்வே கோட்டத்தில் சென்னை கடற்கரை-செங்கல்பட்டு இடையே வரும் நவம்பர் மாதத்தில் இதற்கான சோதனை ஓட்டத்தை நடத்தவும் தெற்கு ரெயில்வே திட்டமிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஏ சிபெட்டிகளை கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து, தெற்கு ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
பெரம்பூரில் உள்ள ஐசிஎப்பில் ஏற்கனவே மும்பை புறநகர் மின்சார ரெயிலுக்காக ஏசி பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகிறது. தெற்கு ரெயில்வேக்கு 12 ஏசி பெட்டிகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. விரைவில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் புறநகர் மின்சார ரெயில்களில் ஏசி பெட்டிகளை இணைத்து இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரை- செங்கல்பட்டு வழித்தடத்தில் ஏசி வசதி கொண்ட மின்சார ரெயில் பெட்டிகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்