என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ரேஷன் கடைகளில் டேன்டீ தேயிலை தூள் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்- வனத்துறை அமைச்சர் மதிவேந்தன்
- டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
- 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
குன்னூர்:
நீலகிரி மாவட்டம் குன்னூர் டேன் டீயில் தமிழக வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் ஆய்வு மேற்கொண்டார்.
பின்னர், தொழிற்சங்க நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கெண்டார். அப்போது, தோட்ட தொழிலாளர் சம்பள பிரச்சனை, குடியிருப்பு வசதி, மற்றும் டேன் டீயை எவ்வாறு லாபத்தில் கொண்டு செல்வது ஓய்வு பெற்ற டேன் டீ ஊழியர்களுக்கு முதலமைச்சர் அறிவித்தபடி வீடு கட்டி கொடுப்பது மற்றும் ரேஷன் கடைகளில் டேன் டீ யில் உற்பத்தி செய்யப்படும் தேயிலை தூளை விற்பனை செய்வது உட்பட பல்வேறு கோரிக்கைகளை தொழிற்சங்கத்தினர் வற்புறுத்தினர்.
இதுதொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறை அமைச்சர் தெரித்தார்.
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
டேன் டீ ஊழியர்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் வகையில் டேன்டீ நிறுவனத்தை லாபத்தில் கொண்டு செல்வது என ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் ரேஷன் கடை மற்றும் சுற்றுலா தலங்களில் டேன் டீ தேயிலை தூளை விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். 2018-ல் மூடப்பட்ட 2 தொழிற்சாலைகளை மீண்டும் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.