என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
X
மாநகராட்சி பள்ளியின் மாடியில் உள்ள குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த மாணவர்கள்
Byமாலை மலர்12 Dec 2023 8:52 AM IST (Updated: 12 Dec 2023 12:06 PM IST)
- மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர்.
- சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
கொரட்டூர்:
சென்னை கொரட்டூர் சாவடி தெருவில் மாநகராட்சி உயர்நிலைப் பள்ளிக்கூடம் உள்ளது. ஒரு வார விடுமுறைக்கு பிறகு நேற்று பள்ளிக்கூடம் திறக்கப்பட்டது.
இந்தநிலையில் பள்ளியின் மொட்டை மாடியில் உள்ள பிளாஸ்டிக் குடிநீர் தொட்டியை பள்ளியில் படிக்கும் மாணவர்கள் சிலர் சுத்தம் செய்து கொண்டிருந்தனர். ஆபத்தை உணராமல் குடிநீர் தொட்டி மீது ஏறி நின்றபடி குடிநீர் தொட்டியில் இருந்த அசுத்த நீரை வாளி மூலம் வெளியேற்றி வந்தனர். இதை சாலையில் சென்ற ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார்.
இதுபற்றி பள்ளி மாணவர்களிடம் அவர் கேட்டபோது, தலைமை ஆசிரியர்தான் குடிநீர் தொட்டியை சுத்தம் செய்ய சொன்னதாக மாணவர்கள் கூறும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. தற்போது இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Next Story
×