என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
தமிழகத்தில் 113 ஆண்டுகளில் இல்லாத மழை பொழிவு
- தமிழகத்தில் நடப்பாண்டில் இதுவரை 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
- ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது
சென்னை:
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பகுதியில் இயல்பை விட 93 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரை, தென்மேற்கு பருவமழை 40 சென்டிமீட்டர் வரை பதிவாகியுள்ளது. இது கடந்த ஆண்டை காட்டிலும் 88 சதவீதம் அதிகம் என வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இதுவரை அதிகளவில் 1906 ஆம் ஆண்டில் 112 சென்டிமீட்டர் மழையும், 1909ம் ஆண்டு 127 சென்டிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இந்நிலையில், நடப்பாண்டில் 93 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ள நிலையில், இதுவே கடந்த 113 ஆண்டுகளில் பதிவாகியுள்ள அதிகளவிலான மழை என்பது குறிப்பிடத்தக்கது.
செப்டம்பர் 5ம் தேதி வரை தமிழகத்தின் 18 மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.