என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
விளாத்திகுளம் அருகே கண்மாயில் மூழ்கி 3 மாணவர்கள் பலி
- கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர்.
- ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
விளாத்திகுளம்:
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே சிவலார்பட்டி வடக்கு தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மகன் மகேஷ்குமார் (வயது11) அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வந்தான். இவனது தம்பி அருண்குமார் (7).
நேற்று மாலை அண்ணன், தம்பி இருவரும் அதே பகுதியை சேர்ந்த தங்களது நண்பனான கார்த்திகேயன் மகன் சுதனுடன் (7) அங்குள்ள கண்மாய் பகுதியில் விளையாட சென்றனர். இவர்கள் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் அப்பகுதியில் தேடினர்.
இந்நிலையில் கண்மாய் கரையோரம் சிறுவர்களின் சைக்கிள் நிற்பதை பார்த்த சிலர், உடனடியாக ஊருக்குள் சென்று தகவல் கூறினர். இதையடுத்து கிராமமக்கள் அங்கு வந்து பார்த்தபோது கண்மாய் நீரில் மாணவர் அருண்குமார் உடல் மிதந்தது. இதைத்தொடர்ந்து கிராமமக்கள் கண்மாய் தண்ணீரில் இறங்கி தேடினர். இதில், மகேஷ் மற்றும் சுதன் ஆகியோரின் உடல்களும் மீட்கப்பட்டன.
தகவல் அறிந்து அங்கு சென்ற புதூர் போலீசார் 3 மாணவர்களின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக பெய்த கோடை மலையில் கண்மாயில் நீர்வரத்து ஏற்பட்டு தண்ணீர் இருந்துள்ளது. இதில், கண்மாய் அருகே விளையாட சென்ற மாணவர்கள், குளிப்பதற்காக இறங்கி உள்ளனர். அப்போது அருண்குமார் நீரில் மூழ்கி உள்ளான். இதனை பார்த்த மகேஷ்குமார் மற்றும் சுதன் ஆகியோர், சிறுவனை அருண்குமாரை காப்பாற்ற சென்றுள்ளனர். ஆனால் தண்ணீர் அதிகளவில் இருந்ததால் அவர்களும் நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே கிராமத்தை சேர்ந்த அண்ணன், தம்பி உள்ளிட்ட 3 மாணவர்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தையே சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்