என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கோவையில் இன்று கவர்னருக்கு கருப்பு கொடி காட்ட முயன்ற மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் 50 பேர் கைது
- எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தனர்.
- 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் சிட்ரா சிக்னல் அருகே குவிந்தனர்.
கோவை:
தமிழக கவர்னர் 5 நாள் பயணமாக 8-ந் தேதி ஊட்டிக்கு வந்தார்.
இன்று அவர் ஊட்டியில் இருந்து கார் மூலமாக கோவைக்கு வந்தார். பின்னர் கோவை ஈஷா யோகா மையத்திற்கு சென்ற அவர், கோவை விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு செல்ல இருந்தார்.
இந்த நிலையில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழா ஒன்றில் பங்கேற்ற கவர்னர் ஆர்.என்.ரவி காரல்மார்க்ஸ் குறித்து இழிவுபடுத்தும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் தமிழகத்தில் கவர்னர் செல்லும் இடங்களில் எல்லாம் கருப்பு கொடி காட்டுவோம் என அறிவித்தனர்.
இந்த நிலையில் ஊட்டியில் இருந்து இன்று சென்னை திரும்புவதற்காக கோவை விமான நிலையத்திற்கு கவர்னர் வருவதை அறிந்ததும், 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயலாளர் பத்மநாபன் தலைமையில் சிட்ரா சிக்னல் அருகே குவிந்தனர்.
அவர்கள் சாலையோரம் நின்றபடி கவர்னர் ரவிக்கு எதிராக கருப்பு கொடி காட்ட முயன்றனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் போலீசார் கவர்னருக்கு கருப்பு கொடி காட் முயன்ற மாவட்ட செயலாளர் பத்மநாபன் உள்பட 50க்கும் மேற்பட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை கைது செய்தனர். இதையடுத்து அங்கு பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து கவர்னர் ஆர்.என்.ரவி சென்னை புறப்பட்டு சென்றார்.