என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பா.ம.க.வுடன் கூட்டணிக்கு பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம்- அடுத்த வாரம் தொகுதி பங்கீடு?
- பிரதமர் மோடி விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
- பாமக பா.ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்து விடும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
சென்னை:
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்து வருகிறது. தி.மு.க. தலைமையிலான கூட்டணிக்கு எதிராக அ.தி.மு.க. பாரதிய ஜனதா கட்சிகள் தனித்தனியாக கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன.
அ.தி.மு.க. கூட்டணியில் இதுவரை இடம் பெற்றிருந்த பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய 2 கட்சிகளும் பெரிய கட்சி என்பதால் இந்த கட்சிகளை இழுக்க பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
ஆரம்பத்தில் பா.ஜனதா கட்சி நிர்வாகிகள் பா.ம.க. வை கூட்டணியில் சேர்க்க முயற்சி செய்து வரும் தகவல் கிடைத்ததும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி காய் நகர்த்தி சி.வி.சண்முகத்தை தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசை சந்திக்க ஏற்பாடு செய்தார்.
அதன்படி சி.வி.சண்முகம் எம்.பி. டாக்டர் ராமதாசை சந்தித்து பேசினார். சுமார் ½ மணிநேரம் நடைபெற்ற இந்த பேச்சு வார்த்தையின் போது பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இடம்பெற வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி விரும்புவதாக கூறினார்.
கடந்த தேர்தலில் ஒதுக்கிய 7 தொகுதியைவிட கூடுதலாக 2 தொகுதியும் ஒரு ராஜ்ய சபா சீட் தருகிறோம் என்றும் சி.வி.சண்முகம் கூறினார்.
ஆனால் டாக்டர் ராமதாஸ் அதற்கு பிடிகொடுத்து பேசவில்லை. எங்கள் கட்சி நிர்வாகிகளோடு கலந்து பேசி முடிவு சொல்கிறேன் என்று கூறிவிட்டார்.
இந்த நிலையில் மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜனதா அரசு தான் மீண்டும் ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கருத்து கணிப்புகள் வெளியாகி வருவதால் பா.ம.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு செல்ல விரும்பவில்லை என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன.
பா.ஜனதா கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெறும் பட்சத்தில் மத்திய மந்திரி பதவியை கேட்டு பெற்றுவிடலாம் என்று பா.ம.க. கணக்கு போட்டு வருகிறது.
இதன் காரணமாக பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. விரைவில் இடம் பெறும் என்று கட்சி நிர்வாகிகளும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இப்போதைய சூழலில் அ.தி.மு.க. கூட்டணியில் சேருவதை விட பா.ஜனதா கூட்டணிக்கு செல்லும் போது எம்.பி.யாக ஜெயித்தால் மத்திய மந்திரி பதவி கிடைத்து விடும் என்பதால் டாக்டர் ராமதாஸ் அந்த முடிவைத்தான் எடுப்பார் என்றும் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
பாரதிய ஜனதா கட்சியிடம் பா.ம.க. 12 தொகுதி வரை கேட்டுள்ளதாகவும் 7 தொகுதி வரை கொடுக்க பா.ஜ.க. முன் வந்துள்ள நிலையில் கூடுதலாக 2 சீட் வாங்கி தேர்தலில் கூட்டணி அமைக்க பா.ம.க. தரப்பு தற்போது ஒத்துக் கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளது.
அடுத்த வாரம் பா.ம.க. பா.ஜனதா கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து பேசி முடிவு செய்து விடும் என்றும் அக்கட்சி நிர்வாகிகள் கூறி வருகின்றனர்.
அ.தி.மு.க. கூட்டணிக்கு பா.ம.க. செல்ல விரும்பவில்லை என்ற தகவல் பா.ஜனதா கட்சிக்கு தெரிய வந்துள்ளதால் பா.ம.க.வுடன் கூட்டணியை உறுதிபடுத்த பா.ஜ.க. தலைவர்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.
பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க.வுக்கு ஸ்ரீபெரும்புதூர், ஆரணி, மயிலாடுதுறை, தர்மபுரி, விழுப்புரம், கடலூர், அரக்கோணம், காஞ்சிபுரம் ஆகிய தொகுதிகளை ஒதுக்க தயாராக இருப்பதாகவும் தகவல் தெரிவித்து உள்ளனர்.
இந்த தொகுதிகள் பா.ம.க. வலுவாக உள்ள தொகுதிகள் என்பதால் அதை பா.ம.க. ஏற்றுக் கொள்ளும் என்றும் மேலும் தொகுதிகள் கேட்டால் கூட தலைமை அதற்கு ஒத்துக் கொள்ளும் என்றும் பா.ஜனதா நிர்வாகிகளும் கூறி வருகின்றனர்.
எனவே பா.ஜனதா கூட்டணியில் பா.ம.க. சேருவது உறுதியாகி உள்ளது. இதே போல் தே.மு.தி.க.வுடன் கூட்டணி அமைக்கவும் பா.ஜனதா கட்சி முனைப்பு காட்டி வருகிறது.
விஜயகாந்தின் மறைவுக்கு பிறகு மத்திய அரசு சார்பில் அவருக்கு தொடர்ச்சியாக பல்வேறு மரியாதைகள் செய்யப்பட்டுள்ளன.
பிரதமர் மோடி விஜயகாந்தை தனது நெருங்கிய நண்பர் என்று புகழ்ந்து பேசி அறிக்கை வெளியிட்டிருந்தார். பத்ம விருதும் விஜயகாந்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இது மத்திய அரசின் மீதும் பிரதமர் மோடி மீதும் தே.மு.தி.க.வினருக்கு ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
அதே நேரத்தில் மத்தியில் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் ஆட்சிக்கு வரும் பட்சத்தில் எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்று கட்சியை வளர்ப்பதற்கு உதவும் என்றும் பிரேமலதா கருதுகிறார்.
இது போன்ற காரணங்களால் தே.மு.தி.க.வும் பா.ஜனதா கூட்டணியில் சேர உள்ளதாக பேசப்படுகிறது. இது சம்பந்தமாக தே.மு.தி.க. தலைவர்களுடனும் பா.ஜனதா மூத்த நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்