search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
    X

    காஞ்சிபுரத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

    • மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது.
    • நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    காஞ்சிபுரம்:

    தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு வங்கிகளில் நீண்ட கால நிலுவை கோரிக்கைகளுக்கு தீர்வு காணக்கோரி காஞ்சிபுரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் ஒருங்கிணைப்பு குழு சார்பில் காஞ்சிபுரத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கி தலைமை அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றதுது. ஒருங்கிணைப்பாளர்கள் கிருஷ்ணகுமார், சுப்பிரமணியன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

    இதில் மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள், நகர கூட்டுறவு வங்கி மற்றும் தொடக்க வேளாண்மை ஊரக வளர்ச்சி வங்கி ஊழியர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    கூட்டுறவு சங்கங்களின் பதிவாளரை வலியுறுத்தி நடைபெற்ற இந்த போராட்டத்தில் கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு கோரிக்கை 30 மாதத்திற்கும் மேலாக கால தாமதமாகி வருகிறது. இதனை உடனடியாக ஆணையாக வெளியிட வேண்டும் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்பிட வேண்டும். நகர மற்றும் தொடக்க நிலை வங்கிகள் ஆகியவற்றை முற்றிலும் கணினி மயமாக்கிட வேண்டும்.

    நகர கூட்டுறவு வங்கிகளில் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் வழங்க அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளின் படி கருணை ஓய்வூதியம் உடனடியாக வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    Next Story
    ×