search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு பிறகு அனுமதி
    X

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனக சபை மீது ஏறி பக்தர்கள் வழிபட 4 நாட்களுக்கு பிறகு அனுமதி

    • கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.
    • சிதம்பரம் நடராஜர் கோவிலில் இன்று காலை முதல் கனகசபை மீது ஏறி பக்தர்கள் வழிபட்டனர்.

    சிதம்பரம்:

    சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனித் திருமஞ்சன தரிசனம், ஆருத்ரா தரிசனம் என ஆண்டுக்கு 2 முறை நடைபெறும் விழாக்களின் போது மூலவர் சபையிலிருந்து வெளியே வரும் நடைமுறையால் 4 நாட்களுக்கு கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி வழங்கப்படுவதில்லை. இது தொன்றுதொட்டு நடைபெறும் வழக்கமாகும்.

    இந்த நிலையில் கடந்த 24-ந் தேதி முதல் இன்று வரை கனக சபையில் ஏறி தரிசிக்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்ற அறிவிப்பு பதாகையை தீட்சிதர்கள் வைத்தனர்.

    இது குறித்த புகாரின் பேரில் இந்து சமய அறநிலையத்துறையினர் கடநத 24-ந்தேதி கோவிலுக்கு வந்து விசாரணை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், தீட்சிதர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

    இந்த விவகாரம் தொடர்பாக 10 தீட்சிதர்கள் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    இந்நிலையில் ஆனி திருமஞ்சன தரிசன உற்சவம் முடிந்த நிலையில் இன்று (புதன்கிழமை) காலை பால் நிவேத்ய பூஜை முடிவு பெற்றவுடன், தீட்சிதர்கள் அறிவித்தபடி காலை 7 மணிக்கு கனக சபை மீது பக்தர்கள் ஏறி சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.

    இதனை தொடர்ந்து கனக சபை மீது பக்தர்கள் இன்று காலை முதல் ஏறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

    Next Story
    ×