search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சட்டையை கழற்றிவிட்டு என்னுடன் சண்டைக்கு வா குடிபோதையில் போலீஸ்காரரை ஆபாசமாக பேசிய வாலிபர்
    X

    சட்டையை கழற்றிவிட்டு என்னுடன் சண்டைக்கு வா குடிபோதையில் போலீஸ்காரரை ஆபாசமாக பேசிய வாலிபர்

    • ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார்.
    • போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார்.

    சத்தியமங்கலம்:

    ஈரோடு மாவட்டம் பவானிசாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்தவர் தீபன் (35). பெயிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று மாலை 4.30 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் பவானி சாகர் அரசு தொடக்கப்பள்ளிக்கு தனது முதல் மனைவிக்கு பிறந்த 3-ம் வகுப்பு படிக்கும் மகனை பார்க்கச் சென்றார்.

    அப்போது குடி போதையில் இருந்ததால் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு அனுமதி மறுத்தனர். அப்போது ஆசிரியர்களை ஆபாசமாக பேசி திட்டினார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இது குறித்து பவானி சாகர் போலீஸ் நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர்.

    சம்பவ இடத்துக்கு போலீஸ்காரர்கள் சண்முகம், செல்லமுத்து ஆகியோர் சென்றனர். அவர்கள் பள்ளியில் ஆசிரியரிடம் தகராறு செய்த தீபனை வெளியே செல்லுமாறு கூறினர். ஆனால் தீபன் வெளியே செல்ல மறுத்து போலீசார் மற்றும் மற்ற குழந்தைகளின் பெற்றோருடனும் தகராறு செய்தார்.

    ஒரு கட்டத்தில் குடிபோதையில் இருந்த தீபன் போலீசாரை கடுமையான ஆபாச வார்த்தைகளால் திட்டினார். மேலும் ஒருமையில் பேசி "சட்டையை கழற்றி விட்டு என்னுடன் சண்டைக்கு வா" என்றும் ஆபாசமாக பேசினார். இதனால் பரபரப்பு நிலவியது.

    இதையடுத்து போலீசார் மோட்டார் சைக்கிளுடன் பவானிசாகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். பின்னர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வரப்பட்ட தீபன் திடீரென தனக்கு தானே பாட்டிலால் வயிறு மற்றும் கழுத்து பகுதியில் சிறிது கிழித்துக் கொண்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது உடனடியாக 108 ஆம்புலன்சு மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை பெற்று இரவே தீபன் வீடு திரும்பினார்.

    போலீசாரை குடி போதையில் தீபன் ஆபாசமாக பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இதையடுத்து அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்ய போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×