search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    மக்கள் உயிருக்கு மதிப்பளிக்காத மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - இ.பி.எஸ்.
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    மக்கள் உயிருக்கு மதிப்பளிக்காத மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும் - இ.பி.எஸ்.

    • காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.
    • தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த விஷச்சாராயம் குடித்து இதுவரை 36பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 125-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இதையடுத்து, விஷச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கள்ளக்குறிச்சிக்கு விரைந்தார்.

    மருத்துவமனையில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் தெரிவித்து நலம் விசாரித்த அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    * கள்ளச்சாராயம் பருகி உயிரிழந்தவர்கள் அனைவரும் ஏழைகள்.

    * கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை கொடிகட்டி பறந்துள்ளது. கள்ளக்குறிச்சி நகரின் மையப்பகுதியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

    * காவல் நிலையத்திற்கு பின்புறமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விற்பனையில் ஆளும்கட்சி பிரமுகர்களுக்கு தொடர்பு உள்ளது. ஆளுங்கட்சி தொடர்பு இருப்பதால் தான் காவல்நிலையம் அருகே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெற்றுள்ளது.

    * செங்கல்பட்டு, விழுப்புரம் மாவட்டங்களில் கடந்த வருடம் கள்ளச்சாராய மரணம் ஏற்பட்டது. கடந்த ஆண்டு கள்ளச்சாராய மரணம் தொடர்பாக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது.

    * கள்ளச்சாராயம் குறித்து எஸ்.பி.யிடம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. செந்தில்குமார் நேரடியாக புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

    கள்ளக்குறிச்சி எஸ்.பி.யிடம் செல்போன் மூலம் அதிமுக எம்எல்ஏ புகார் அளித்தார்.

    * தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராயம் ஆறுபோல் ஓடிக்கொண்டிருக்கிறது.

    * தமிழ்நாடு முழுவதும் போதைப்பொருள் புழக்கம் மிக அதிகமாக உள்ளது.

    * திமுக ஆட்சியில் மக்கள் உயிருக்கு மதிப்பு இல்லாத சூழல் உள்ளது.

    * கள்ளச்சாராயம் விவகாரத்தில் தார்மீக பொறுப்பேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதவி விலக வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது எடப்பாடி பழனிசாமியுடன் மாநிலங்களவை எம்.பி. சி.வி.சண்முகம், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×