search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து உற்சாகத்துடன் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள்
    X

    மீன் பிடிக்க புறப்பட்டு சென்ற விசைப்படகுகள்


    தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து தூத்துக்குடியில் இருந்து உற்சாகத்துடன் மீன் பிடிக்க சென்ற விசைப்படகுகள்

    • முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கு நல உதவிகள் செய்கிறார்.
    • மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்குகிறது.

    தூத்துக்குடி:

    கடல்வளத்தை பாதுகாக்கவும், மீன்கள் இனப்பெருக்கத்திற்காகவும் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமல்படுத்தப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் இந்த ஆண்டுக்கான மீன்பிடி தடைக்காலம் கடந்த ஏப்ரல் 15-ந் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து தூத்துக்குடி விசைப்படகுகள் கரையில் நிறுத்தப்பட்டு இருந்தன.

    இந்நிலையில் நேற்று நள்ளிரவுடன் மீன்பிடி தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று அதிகாலை 5 மணிக்கு விசைப்படகு மீனவர்கள் உற்சாகமாக கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். மீன்வளத்துைற உதவி இயக்குனர் பிரின்சி வயலா ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு போக்கு வரத்தை தொடங்கி வைத்தார்.

    தூத்துக்குடி துறைமுகத்தில் மொத்தம் 262 பதிவு செய்யப்பட்ட படகுகள் உள்ள நிலையில் மீன்பிடி விசைப்படகு சங்கத்தினர் 61 நாட்களுக்கு பின்னர் கடலுக்கு செல்வதால் மீன்பாடு அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்ற அடிப்படையில் சுழற்சி முறையில் செல்ல முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி 130 விசைப்படகுகள் இன்றும், 132 விசைப்படகுகள் நாளையும் கடலுக்கு செல்கின்றனர். முதல் நாளான இன்று விசைப்படகு கடலுக்கு செல்வதை வரவேற்கும் வகையில் தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்து உற்சாகமாக கடலுக்கு புறப்பட்டு சென்றன.

    இது தொடர்பாக மீனவர்கள் கூறியதாவது:-

    கடந்த 2 மாதங்களாக மீன்கள் இனப்பெருக்க காலம் என்பதால் மீன்பிடி தடைக்காலம் அமலில் இருந்து வந்ததால் நாங்கள் மீன்பிடிக்கச் செல்லவில்லை.

    ஏற்கனவே தூத்துக்குடி துறைமுக கடலில் கடல் ஆழப்படுத்தும் பணி நடைபெற்று வருவதால் அதற்கு முன்பாகவே நாங்கள் 3 மாதகாலம் மீன்பிடி தொழிலில் ஈடுபடாமல் இருந்து வந்தோம். எனவே இன்று மிகுந்த எதிர்பார்ப்போடு நாங்கள் அதிக மீன்கள் கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு கடலுக்கு மீன்பிடிக்க செல்கிறோம் என்று கூறினர்.

    முன்னதாக மீனவர்கள் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர். பட்டாசுகள் வெடித்தனர். 2 மாதத்திற்கு பின்பு மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க விசைப்படகுகளில் செல்வதை பார்ப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மீனவர்கள் வந்திருந்தனர்.

    தூத்துக்குடி விசைப்படகு தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தர்மபிச்சை என்பவர் கூறுகையில், மீனவர்கள் ஓய்வு ஊதியத்தை அமல்படுத்த கோரிக்கை வைத்து வருகிறோம். அதை நிறைவேற்றப் படாமலேயே இருந்து வருகிறது.

    முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் மீனவர்களுக்கு நல உதவிகள் செய்கிறார். இது குறித்தும் அவர் நடவடிக்கை வேண்டும். மீன்பிடி தடை காலத்தில் மீனவர்களுக்கு ரூ. 5 ஆயிரம் அரசு வழங்குகிறது. கூடுதலாக ஆயிரம் வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி ரூ. 6 ஆயிரம் இதுவரை வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை உடனடியாக வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×