search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    விருத்தாசலம் அருகே 6 வருட காதல், 6 மாத கர்ப்பம்: காதலனை போராடி கரம்பிடித்த காதலி
    X

    விருத்தாசலம் அருகே 6 வருட காதல், 6 மாத கர்ப்பம்: காதலனை போராடி கரம்பிடித்த காதலி

    • புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார்.
    • நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    விருத்தாசலம்:

    கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே பூவனூர் பகுதியை சேர்ந்தவர் நிதீஷ்குமார் பி.ஏ பட்டதாரி.

    இவர் எம்.பரூர் கிராமத்தை சேர்ந்த நாகலட்சுமி என்ற பெண்ணை கடந்த 6 வருடமாக காதலித்து வந்தார். நாகலட்சுமி மங்கலம்பேட்டை பகுதியில் உள்ள ஒரு கடையில் வேலை பார்த்து வந்தார். இந்த கடைக்கு நிதீஷ்குமார் அடிக்கடி சென்று வருவார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இருவரும் தனிமையில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக நாகலட்சுமி 6 மாத கர்ப்பமானார்.

    இதனைதொடர்ந்து நாகலட்சுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிதீஷ்குமாரிடம் கேட்டுள்ளார். அதற்கு நிதீஷ்குமார் திருமணம் செய்ய மறுத்துவிட்டு நாகலட்சுமியை விட்டு விலக ஆரம்பித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த நாகலட்சுமி விருத்தாசலம் பூவனூரில் உள்ள நிதீஷ்குமார் வீட்டிற்கு சென்று நியாயம் கேட்டுள்ளார். நிதீஷ்குமார் வீட்டின் தரப்பில் இருந்து எந்தவித பதிலும் அளிக்கவில்லை. இதனையடுத்து நாகலட்சுமி விருத்தாசலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து நிதீஷ்குமாரை பிடித்து விசாரணை நடத்தியதில் நிதீஷ்குமார் நாகலட்சுமியை திருமணம் செய்ய சம்மதித்தார். இதனைதொடர்ந்து இருவீட்டாரின் முன்னிலையில் விருத்தாசலம் வண்ண முத்துமாரியம்மன் கோவிலில் வைத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. பின்னர் நிதீஷ்குமாரிடம் போலீசார் இனிமேல் நாகலட்சுமியிடம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என எச்சரித்து அனுப்பி வைத்தனர்.

    Next Story
    ×