search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு
    X

    உலக முதலீட்டாளர்கள் மாநாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வைகோ பாராட்டு

    • உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.
    • 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்” என்றும் குறிப்ப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

    ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது-

    2024-ம் ஆண்டின் தொடக்கத்தில் ஜனவரி 7, 8 ஆகிய நாட்களில் சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு, தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சியில் மிகப் பெரிய சாதனையை நிகழ்த்தி உள்ளது.

    சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்ற இம்மாநாட்டின் நிறைவு விழாவில் சிறப்புரை ஆற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் இறுதி செய்யப்பட்ட மொத்த முதலீடுகள் முன் எப்போதும் இல்லாத அளவாக 6 லட்சத்து 64 ஆயிரத்து 180 கோடி ரூபாய் என்பதை இந்தியாவே உற்று நோக்கும் இந்த அவையில் பெரு மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன் என்றும், இந்த முதலீடுகள் மூலம் நேரடி மற்றும் மறைமுகமாக மொத்தம் 26 லட்சத்து 90 ஆயிரத்து 657 வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும்" என்றும் குறிப்ப்பிட்டது நம் அனைவருக்கும் அளவு கடந்த மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது. தொழில் வளர்ச்சியின் மூலம் பொருளாதார நிறைவு காணவும், லட்சக்கணக்கான தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பினைப் பெற்றுத் தரவும், நாட்டை வலுவான பாதைக்கு அழைத்துச் செல்லவும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு என் அன்பான பாராட்டுகள், வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×