என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு (Tamil Nadu)
தங்கம் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்தது
- சென்னையில் இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.352 குறைந்து, ஒரு சவரன் ரூ.37,680-க்கு விற்பனையாகிறது.
- வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது.
சென்னை:
தங்கம் விலை கடந்த வாரம் ஏற்ற இறக்கமாக காணப்பட்டது. ஆனால் இந்த வார தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை தொடர்ந்து குறைந்து வந்தது.
கடந்த 24-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.38,440-க்கு விற்கப்பட்டது. மறுநாள் 25-ந்தேதி அது அதிரடியாக உயர்ந்து ரூ.38,800 ஆனது. 26-ந்தேதி தங்கம் விலை ரூ.38,560 ஆக குறைந்தது. 27-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,440-க்கு விற்கப்பட்டது.
29-ந்தேதி மீண்டும் குறைந்து ரூ.38,120-க்கு விற்பனையானது. நேற்று முன்தினம் ரூ.38,320 ஆக உயர்ந்தது. இந்த நிலையில் நேற்று ரூ.38,032 ஆக குறைந்தது.
இந்த நிலையில் தங்கம் விலை இன்று அதிரடியாக குறைந்து ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. இன்று பவுனுக்கு ரூ.352 குறைந்து ரூ.37,680-க்கு விற்பனை ஆகிறது.
கடந்த ஜூலை மாதம் 27-ந்தேதி 1 பவுன் தங்கம் ரூ.37,880-க்கு விற்றது. அதன் பிறகு இன்று பவுன் ரூ.38 ஆயிரத்துக்கு கீழே வந்தது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.4,754-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு ரூ.44 குறைந்து ரூ.4,710-க்கு விற்கப்படுகிறது.
இதேபோல் வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராம் வெள்ளி ரூ.60-க்கு விற்கப்பட்டது. இன்று கிராமுக்கு 2 ரூபாய் குறைந்து ரூ.58-க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ பார் வெள்ளி ரூ.58,000-க்கு விற்பனையாகிறது.