search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டம்- ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய கோரிக்கை
    X

    அரசு ஊழியர்கள் முற்றுகை போராட்டம்- ஊராட்சி மன்ற தலைவரை கைது செய்ய கோரிக்கை

    • உசிலம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றுபவர் கருப்பையா.
    • ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    உசிலம்பட்டி:

    மதுரை மாவட்டம் உசிலம்பட்டி ஊராட்சியில் ஒன்றிய அலுவலகத்தில் கணக்காளராக பணியாற்றுபவர் கருப்பையா. இவர் நேற்று பணியில் இருந்தபோது போத்தம்பட்டி ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க. நிர்வாகியுமான உக்கிரபாண்டி என்பவர் தகராறு செய்து தாக்கியதாக கூறப்படுகிறது.

    இதை கண்டித்து உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய ஊழியர்கள் நகர் போலீசில் உக்கிரபாண்டி மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது புகார் அளித்தனர். அதன் அடிப்படையில் அரசு ஊழியரை தாக்கியது, பணி செய்ய விடாமல் தடுத்தது, கொலை மிரட்டல் விடுத்தது உள்ளிட்ட 9 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து உக்கிரபாண்டியை போலீசார் தேடி வருகின்றனர்.

    அரசு ஊழியர் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து உசிலம்பட்டி ஊராட்சி அலுவலகம் முன்பு இன்று உசிலம்பட்டி, பேரையூர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், சோழவந்தான் ஆகிய தாலுக்காக்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் ஒருநாள் விடுப்பு எடுத்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அரசு ஊழியரை தாக்கிய உக்கிரபாண்டியை கைது செய்ய வேண்டும். பாதுகாப்பு வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. இதில் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் அய்யப்பன் எம்.எல்.ஏ., ஊராட்சி ஒன்றிய தலைவர் ரஞ்சனி சுதந்திரம் ஆகியோர் பேச்சு வார்த்தை நடத்தினர்.

    Next Story
    ×