என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாரதத்தை இணைக்கும் பாலமாகவும் இருக்கிறார் ஸ்ரீராமர்: கவர்னர் ஆர்.என்.ரவி உரை
- சர்வதேச விளையாட்டுக்களில் சாதனை படைக்கும் அளவுக்கு பதக்கங்களை வென்ற நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.
- நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள்.
சென்னை:
நாட்டின் 75-வது குடியரசு தின விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகே கவர்னர் ஆர்.என்.ரவி தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சிக்கு முன்னதாக கவர்னர் ஆர்.என்.ரவி தமிழக மக்களுக்கு உரை நிகழ்த்தியுள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-
பாரதக் குடியரசின் 75-வது ஆண்டு மங்கலகரமான தருணத்தை முன்னிட்டு, நான் தமிழ்நாட்டின என் சகோதர, சகோதரிகளுக்கு என் வாழ்த்துகளையும், நல்விருப்பங்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
நமது நாட்டினை அந்நிய ஆட்சியிடமிருந்து மீட்டு, நமக்கு சுதந்திரத்தை அளித்த கணக்கில்லாத உயிர்த்தியாகிகள் சுதந்திரப் போராட்ட வீரர்கள் ஆகியோரின் தியாகங்களுக்கு நான் என் இதயம் நெகிழ்ந்த அஞ்சலிகளைக் காணிக்கையாக்குகிறேன்.
நமது இராணுவத்தினர், பாதுகாப்பு அமைப்புகள், காவல்துறையினர் ஆகியோருக்கு என் அக்கறையான வணக்கங்களைத் தெரிவிக்கிறேன். அவர்கள் இடைவிடாத விழிப்புடன் இருந்து, சாகசம் மற்றும் தியாகங்களை புரிந்து நமது நாட்டின் இறையாண்மையையும் ஆள்புலக் கட்டுறுதியையும் பாதுகாக்கிறார்கள்.
மேலும் உள்நாட்டில் அமைதி, ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றை உறுதி செய்து இயற்கை பேரிடர்களின் போது பாதிக்கப்படுவோரை மீட்டு, நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்.
சூறாவளிப் புயலான மிச்சாங் மற்றும் நமது மாநிலத்தின் தென் மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரை மீட்டு நிவாரணம் அளிப்பதிலே, தன்னலமற்ற, தலைசிறந்த சேவை புரிந்த தன்னார்வலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு நான் என் ஆழமான பாராட்டுக்களையும், முனைப்பான நன்றிகளையும் தெரிவிக்கிறேன்.
நிலவுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான சந்திரயான் 3, சூரியனுக்கு மேற்கொள்ளப்பட்ட வெற்றிகரமான பயணமான ஆதித்யா எல்1 ஆகியவை மூலம் நமது விஞ்ஞானிகள் நாட்டிற்குப் பெருமை தேடித்தந்திருக்கிறார்கள். இது தேசத்திற்குப் பெற்றுத்தந்த பெருமிதத்தை நான் உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
சர்வதேச விளையாட்டுக்களில் சாதனை படைக்கும் அளவுக்கு பதக்கங்களை வென்ற நமது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு நான் பாராட்டு தெரிவிக்கிறேன்.
சில நாட்கள் முன்பாகத்தான் குழந்தை ஸ்ரீ ராமனுக்கு அயோத்தியில் மகோன்னதமான ஸ்ரீராமர் ஆலயத்தில் பிராண பிரதிஷ்டை என்ற யுகாந்தர புனித நிகழ்வு நிறைவேறியது. இந்த வரலாற்றுப் பூர்வமான நிகழ்ச்சி, நாடு முழுவதிலும் சக்தியையும், உற்சாகத்தையும் ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல் மக்களின் மனங்களில் ஒரு முழுமையான வளர்ந்த பாரத்தை உருவாக்கத் தேவையான தன்னம்பிக்கை, புதிய ஆற்றல் ஆகியவற்றையும் இட்டு நிரப்பியது. ஸ்ரீராமன் நமது தேசியச் சின்னமாக, உத்வேகமாக இருந்து வந்திருக்கிறார். பாரத நாட்டின் அனைத்து குடிமக்களின் இதயங்களிலும் வாசம் செய்யும் அவர், பாரதத்தை இணைக்கும் அனைவருக்குமான பாலமாகவும் இருக்கிறார்.
அவர் கருத்தூக்கத்தின் மொத்த உருவம், நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்டிருக்கம் ஆதர்சங்களான நல்லாளுகைக்கான முழுப்பெரும் எடுத்துக்காட்டாக ராம ராஜ்ஜியம் விளங்குகிறது.
இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார்.
ஆளுநர் ரவி அவர்களின் 75வது குடியரசு தின விழா உரை.
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) January 26, 2024
Governor Ravi's address on 75th Republic Day.https://t.co/GYzQJRplAF@rashtrapatibhvn @PMOIndia @HMOIndia @MinOfCultureGoI @EBSB_Edumin @IndiaSports @isro @HSVB2047 @PIB_India @PIBCulture @pibchennai @DDNewslive…
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்