என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குளச்சலில் கடல் சீற்றம்- மீனவர்கள் மீன் பிடிக்க செல்லவில்லை
- கடற்கரை பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.
- குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
குளச்சல்:
குமரி மாவட்டத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக ராஜாக்கமங்கலம் முதல் நீரோடி வரையிலான மேற்கு கடற்கரை பகுதிகளில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக கடல் சீற்றத்துடனே காணப்பட்டது.
இதனால் குளச்சல், முட்டம், தேங்காய்பட்டணம் மீன்பிடி துறைமுகங்களை தங்கு தளமாக கொண்டு மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வரும் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் படகு மீனவர்கள் மீன்பிடிக்க செல்லாமல் இருந்து வந்தனர்.
கடந்த இரண்டு நாட்களாக குறைந்த அளவிலான பைபர் வள்ளம் மற்றும் கட்டுமர மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று வந்த நிலையில் இன்று குளச்சல், முட்டம், சுற்றுவட்டார கடல் பகுதிகளில் சூறை காற்றுடன் கடல் சீற்றமாகவே காணப்படுகிறது.
இதனால் குளச்சல், முட்டம், மண்டைக்காடு, கோடிமுனை, வாணியக்குடி, குறும்பனை உட்படபத்துக்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களை சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பைபர் வள்ளம் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாத நிலையில் தங்கள் படகுகளை மீன்பிடி துறைமுகங்களிலேயே நிறுத்தி வைத்துள்ளனர்.