என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குலசேகரன்பட்டினம் கடற்கரையில் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ. 25 லட்சம் பீடி இலைகள் பறிமுதல்
- கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை சோதனையிட்டனர்.
- படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டி கடற்கரையில் இருந்து இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக கியூ பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில் இன்ஸ்பெக்டர் விஜயஅனிதா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வேல்ராஜ், ஜீவமணி, தர்மராஜ், ஏட்டுகள் ராமர், இருதயராஜ், பழனி மற்றும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கடற்கரையில் சந்தேகத்திற்கிடமான முறையில் நின்றுகொண்டிருந்த ஒரு ஜீப்பை சோதனையிட்டனர். அதில் 1½ டன் பீடி இலைகள் இருப்பது தெரியவந்தது.
விசாரணையில் அது படகு மூலம் இலங்கைக்கு கடத்த முயன்றது தெரியவந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ. 25 லட்சம் ஆகும்.
அதனை பறிமுதல் செய்த போலீசார் ஜீப்பில் இருந்த முக்காணி மணிநகரை சேர்ந்த சிபிஷ்டன் (வயது25) என்பவரை கைது செய்தனர். பின்னர் பீடி இலைகள் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட ஜீப், மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அதில் பீடி இலை கடத்தப்பட்ட வாகனம் ஆலந்தழையை சேர்ந்த இருதயஜெரின் என்பவருக்கு சொந்தமானது என தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் தேடி வருகின்றனர்.