என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
மீஞ்சூரில் 6 ஆண்டுகள் ஆகியும் முடியவில்லை- ரெயில்வே மேம்பால பணியை முடிக்கக்கோரி கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
- கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது.
பொன்னேரி:
மீஞ்சூர்,காட்டூர் சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இதனை அரியன்வாயல் காட்டூர், தத்தைமஞ்சி, வாயலூர், திருவல்லவாயில் ஊரணம்பேடு, பழவேற்காடு, உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட கிராமங்கள் மருத்துவம், கல்வி, தொழில் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். இந்த ரெயில்வே கேட்டில் தினந்தோறும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன.
கும்மிடிப்பூண்டி-சென்னை மார்க்கம் மற்றும் வட மாநிலங்களுக்கு செல்லும் ரெயில்கள் அதிகம் செல்வதால் ரெயில் வரும் நேரங்களில் மீஞ்சூர் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. இதனால் ரெயில்வே கேட்டில் இருந்து அரியன் வாயில் வரையிலும் மற்றும் திருவெற்றியூர் சாலை வரையிலும் வாகனங்கள் அணிவகுத்து நிற்பதால் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இதைத்தொடர்ந்து கடந்த 2018-ம் ஆண்டு ரூ.55 கோடிசெலவில் மீஞ்சூர் ரெயில்வே மேம்பாலம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. இந்த பணி பாதி முடிந்த நிலையில் கடந்த 6 ஆண்டுகளாக முடிக்கப்படாமல் உள்ளது. இதற்கான இடம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக ரெயில்வே பணி முடங்கி இருப்பதாக தெரிகிறது.
இந்த நிலையில் கடந்த 6 ஆண்டாக முடங்கி உள்ள மீஞ்சூர் ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்க கோரி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மீஞ்சூர் காட்டூர் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட குழு உறுப்பினர் கதிர்வேல் தலைமை தாங்கினார். இதில் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது ரெயில்வே மேம்பால பணியை விரைந்து முடிக்கக்கோரி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.