search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாமக்கல்லில் நூதன போட்டி- 2½ கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை வென்ற நகராட்சி ஊழியர்
    X

    முதல் பரிசை வென்ற நகராட்சி ஊழியர்.

    நாமக்கல்லில் நூதன போட்டி- 2½ கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் பரிசை வென்ற நகராட்சி ஊழியர்

    • நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது.
    • முன்பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு போட்டி நடந்தது.

    நாமக்கல்:

    'வெண்ணிலா கபடி குழு' படத்தில் நடிகர் சூரி பரோட்டா சாப்பிடும் போட்டியில் பரோட்டாக்களை கணக்கில்லாமல் சாப்பிடும் காமெடி காட்சி இன்றும் பலரால் ரசிக்கப்படுகிறது. பொதுவாக கிராமங்களில் விழாக்களின்போது ஆண், பெண்களுக்கு என பல்வேறு போட்டிகள் நடத்துவது வழக்கம். அதில் உணவு சாப்பிடும் போட்டிகளும் இடம்பெறுவது உண்டு. சிலர் சாப்பாட்டில் வல்லவர்களாக உணவை வெளுத்துக்கட்டி பரிசினை வெல்வார்கள்.

    சில இடங்களில் நூதன சாப்பாட்டு போட்டிகள் நடைபெறுவது உண்டு. நாமக்கல்லில் ஒரு தனியார் ஓட்டலில் பிரியாணி சாப்பிடும் போட்டி நடந்தது. இதில் முன்பதிவு செய்தவர்களில் குலுக்கல் முறையில் 40 பேர் மட்டும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு நேற்று மதியம் போட்டி நடந்தது. இதற்கு நுழைவு கட்டணமாக ரூ.99 வசூலிக்கப்பட்டது.

    போட்டி தொடங்கியதும் அனைவரும் வேகமாக பிரியாணி சாப்பிட்டனர். ஸ்வீட், 2 முட்டை, லெக் பீஸ் உடன் பிரியாணி பரிமாறப்பட்டது. 20 நிமிடத்தில் யார் அதிகளவு பிரியாணி சாப்பிட்டார்களோ அவர்கள் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டனர்.

    இதில் நாமக்கல்லை சேர்ந்த சரவணன் (23) அதிக அளவாக 2.650 கிலோ பிரியாணி சாப்பிட்டு முதல் இடத்தை பிடித்தார். 2.350 கிலோ சாப்பிட்ட ஜீவா 2-வது இடத்தையும், 2.300 கிலோ சாப்பிட்டவர் 3-வது இடத்தையும் பிடித்ததாக பரிசுகள் வழங்கப்பட்டது. முதல் பரிசு பெற்றவர் நாமக்கல் நகராட்சி தற்காலிக ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×