என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
ரூட் தல விவகாரம்... படுகாயமடைந்த மாணவர் உயிரிழப்பு
- பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
- ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
சென்னையில் ரூட் தல விவகாரத்தில் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொள்வது வாடிக்கையாகி வருகிறது. பேருந்து மற்றும் ரெயிலில் பயணிக்கும் போது கல்லூரி மாணவர்களிடையே ரூட் தல தொடர்பாக மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில் கல்லூரி மாணவர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சில நாட்களுக்கு முன்னர் ரூட் தல தொடர்பாக மாணவர்களுக்கிடையே ஏற்பட்ட தகராறில் மாநில கல்லூரி மாணவர் சுந்தர் மீது பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் தாக்குதல் நடத்தினர். இதில் கொடூரமாக தாக்கப்பட்ட சுந்தர் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பச்சையப்பன், மாநிலக் கல்லூரிகளில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும் ரெயில், பஸ் வழித்தடங்களிலும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.
மோதல் தொடர்பாக பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 5 பேரை போலீசார் ஏற்கனவே கைது செய்திருந்தனர். இதற்கிடையே, சுந்தர் தாக்கப்பட்ட வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.