search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கடன் தொல்லையால் விபரீத முடிவு... ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை முயற்சி
    X

    கடன் தொல்லையால் விபரீத முடிவு... ஒரே குடும்பத்தில் 5 பேர் தற்கொலை முயற்சி

    • செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர்.
    • இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர்.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள ஊராண்ட உரப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால் பாண்டி (வயது 41). இவரது மனைவி சிவஜோதி (32). இந்த தம்பதியினருக்கு ஜனார்த்தனன் (14) என்ற மகளும், தர்ஷனா (12), தர்ஷிகா (12) என்ற மகள்களும் உள்ளனர். இதில் தர்ஷனா, தர்ஷிகா இருவரும் இரட்டைக் குழந்தைகள். பிள்ளைகள் மூவரும் அருகில் உள்ள கரடிக்கல் அரசு உயர்நிலைப்பள்ளியில் படித்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பால்பாண்டி சொந்தமாக வியாபாரம் செய்வதற்கு முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வந்தார். இதையடுத்து இரண்டு தனியார் வங்கிகளில் தனது மனைவி சிவஜோதி பெயரில் ரூ.8 லட்சம் மற்றும் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் என கடன் வாங்கி உள்ளனர். அந்த பணத்தில் சிவஜோதி என்ற பெயரில் ஊராண்ட உரப்பனூரில் ஊறுகாய் கம்பெனி நடத்தி வந்தனர்.

    இதற்கிடையே வாங்கிய கடனை முறையாக செலுத்தி வந்த நிலையில் ரூ.2,40,000 கடன் பெற்ற தனியார் வங்கிக்கு முறையாக தவணைத்தொகையை செலுத்தவில்லை என கூறி ஊழியர்கள் கடந்த 10-ந்தேதி வீட்டிற்கு வந்து கேட்டுள்ளனர். அப்போது தம்பதியை சரமாரியாக திட்டியதாகவும் கூறப்படுகிறது.

    மேலும் செல்போனில் அவ்வப்போது சத்தமிட்டு 16-ந்தேதிக்குள் பணத்தை செலுத்தவில்லை என்றால் கடுமையான நடவடிக்கை எடுப்பதாகவும் மிரட்டும் தொணியில் வங்கி ஊழியர்கள் பேசி உள்ளனர். எனவே பணத்தை திரும்ப செலுத்த பல இடங்களிலும் கேட்டும் கிடைக்காததால் மனவிரக்தி அடைந்த பால்பாண்டி தற்கொலை செய்ய முடிவெடுத்தார்.

    பின்னர் உரக்கடையில் விவசாயத்திற்கு பயன்படுத்தப்படும் ஒரு கிலோ குருணை மருந்து வாங்கி வந்துள்ளார். நேற்று இரவு சாப்பிட்டு விட்டு கணவன், மனைவி பிள்ளைகள் மூன்று பேர் என 5 பேரும் இரவில் அந்த குருணை மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து விட்டு வீட்டிலேயே இருந்துள்ளனர். ஒரு சில விநாடிகளில் அனைவரும் மயங்கினர்.

    இன்று காலை சற்று தெளிந்த நிலையில் அவர்கள் 5 பேரும் ஆட்டோவில் ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது பால்பாண்டி தனது மகள் வாந்தி எடுப்பதாக டாக்டரிடம் கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் மற்ற 4 பேரும் வாந்தி எடுத்ததை பார்த்த மருத்துவக்குழுவினர் அவர்களை உடனடியாக உள்நோயாளிகளாக அனுமதித்தனர். அதன்பிறகு டாக்டர்கள் விசாரித்தபோது, கடன் பிரச்சனை காரணமாக 5 பேரும் விஷம் குடித்து விட்டதாக பால்பாண்டி தெரிவித்தார்.

    இதனை அடுத்து ஐந்து பேருக்கும் திருமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளிக் கப்பட்டு தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். சம்பவம் குறித்து தகவல் இருந்த திருமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வியாபாரத்திற்காக தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தக் கூறி வங்கி ஊழியர்கள் நெருக்கடி கொடுத்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் விஷம் குடித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×