என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
முடிவுக்கு வரும் தொடர் விடுமுறை.. நான்கு மாவட்டங்களில் பள்ளிகள் திறக்கும் தேதி அறிவிப்பு
- பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
- தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள உத்தரவு.
மிச்சாங் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு என நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதன் காரணமாக ஏற்பட்ட வெள்ள பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டு இருக்கிறது.
அதன்படி நாளை (டிசம்பர் 08) சென்னையில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தின் ஆறு தாலுகாக்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தின் இரண்டு தாலுகாக்களில் உள்ள பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய நான்கு மாவட்டங்களில் டிசம்பர் 11-ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பள்ளிகளை திறப்பதற்கு முன் தூய்மை, மின் இணைப்பு என தேவையான முன்னேற்பாடுகளை மேற்கொள்ள பள்ளிக்கல்வி துறை இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பி இருக்கிறார்.