என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சென்னையில் போக்குவரத்து விதிமீறலை தடுக்க ரேடார் கருவியுடன் கூடிய அதிநவீன ரோந்து வாகனங்கள்
- நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய முடியும்.
- குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 330 ப்ரீத் அனலைசர் எந்திரங்கள் தவிர 50 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
சென்னை:
சென்னை மாநகரில் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகனங்களை கண்காணித்து அபராதம் விதிக்கும் வகையில் 2 அதிநவீன ரோந்து வாகனங்கள் இன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
இதுதவிர போக்குவரத்து போலீசாருக்கு தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டன. இதற்கான நிகழ்ச்சி சென்னை மெரினா நேப்பியர் பாலம் அருகில் உள்ள போக்குவரத்து பூங்காவில் இன்று நடைபெற்றது.
இதில் சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் புதிய ரோந்து வாகனங்களை தொடங்கி வைத்தார்.
புதிய ரோந்து வாகனங்கள் 360 டிகிரி சுழலக்கூடிய கேமராவை கொண்டுள்ளது. மேலும் தலைகவசம் அணியாமல் வாகனம் ஓட்டுவது, டிரிபிள்ஸ் ரைடிங் வாகனம் ஓட்டும் போது செல்போன்களை பயன்படுத்துவது மற்றும் அதிக வேகத்தில் வாகனத்தை ஓட்டுவது போன்ற விதிமீறல்களை படம்பிடிக்க 2 டிரேடார் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளது.
விதிமீறல்கள் கேமரா மூலம் படம்பிடிக்கப்பட்டு கட்டுப்பாட்டு அறையில் அவற்றை சரிபார்த்த பிறகு ரசீது உருவாக்கப்படுகிறது. விதிகளை மீறுபவருக்கு உடனடியாக இந்த ரசீது அனுப்பப்படும்.
நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்கள் மற்றும் நகரும் வாகனங்கள் மீது போக்குவரத்து விதிமீறல்களை கண்டறிய முடியும். இதுபோன்ற வாகனங்கள் தென் இந்தியாவில் பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
குடித்துவிட்டு வாகனம் ஓட்டும் குற்றங்களை கண்டறிய ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு வரும் 330 ப்ரீத் அனலைசர் எந்திரங்கள் தவிர 50 எந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன. புதிய ப்ரீத் அனலைசர்களில் சிம் பொருத்தப்பட்டுள்ளதால் விவரங்கள் உடனடியாக சர்வருக்கு அனுப்பப்பட்டு முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லை. ஊதுபவர்களின் முகத்தை தெளிவாக படம்பிடிக்க இது சிறந்த கேமரா தரத்துடன் கருவிகள் உள்ளன.
இந்த வகையான ரைபாட் கேமராக்கள் நகரின் எந்த பகுதியில் இருந்தும் போக்குவரத்து நிலைமையை நேரலையாக கண்காணிக்க உதவுகின்றன. மேலும் சிம் கார்டு உள்ளதால் எங்கிருந்தும் கண்காணிக்க முடியும். விசேஷ நாட்கள் மற்றும் விஐபி வருகையின் போது போக்குவரத்தை கண்காணிக்கவும் வாகன சோதனைகளை கண்காணிக்கவும் இது உதவியாக இருக்கும்.
சாலைகளில் முன்னே பேரிகேட்களை கண்டறிய ஈர்க்கும் வகையில் சிறந்த பார்வைக்காக 100 பேரிகேட் ப்ளிங்கர் விளக்குகள். 625 பேட்டன் விளக்குகள் சார்ஜருடன் வாங்கப்பட்டுள்ளன. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேளச்சேரி-விஜயநகர் ஜங்ஷனில் 16X8 அடி அளவிலான புதிய போர்டு நிறுவப்பட்டுள்ளது.
முறையான மற்றும் இடையூறு இல்லாத போக்குவரத்தை ஒழுங்குபடுத்தவும், சாலையில் அறிவிப்புகளை வெளியிடவும் 79 மெகா போன்கள் வாங்கப்பட்டு வினியோகிக்கப்பட்டுள்ளன.
நேப்பியர் பாலம் மற்றும் அண்ணா சதுக்கம் இடையே அமைந்துள்ள சென்னை போக்குவரத்து பூங்கா பெருநகர மாநகராட்சி மற்றும் சென்னை ஸ்மார்ட் சிட்டி லிமிடெட் இணைந்து 2.07 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.
போக்குவரத்து காவலர்கள் தனியார் பள்ளியுடன் ஒத்துழைத்து மாணவர்களை போக்குவரத்து பூங்காவிற்கு அழைத்துவர ஏற்பாடு செய்யும். சென்னை நகரில் மொத்தம் 239 பள்ளிகளில் சுமார் 18000 மாணவர்கள் இருப்பது குறிப்படத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில் பேசிய கமிஷனர் சங்கர் ஜிவால் டெல்லி, மும்பையில் இருப்பது போன்று சென்னை மாநகரில் புதிய ரோந்து வாகனங்கள் இன்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளன என்றும், இந்த ஆண்டு சாலை பாதுகாப்புக்காக ரூ.10 கோடி நிதியை அரசிடம் இருந்து வாங்கி இருக்கிறோம் என்றும் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்