search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல் பிடுங்கிய விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு- விசாரணைக்கு ஏற்பு
    X

    பல் பிடுங்கிய விவகாரம்: தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் 2 புகார் மனு- விசாரணைக்கு ஏற்பு

    • பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.
    • இன்ஸ்பெக்டர் உட்பட 4 இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு உதவியாளர், தனிப்பிரிவு போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    நெல்லை:

    நெல்லை மாவட்டம் அம்பை உட்கோட்ட சரகத்தில் விசாரணைக்கு சென்றவர்களின் பற்களை பிடுங்கிய விவகாரம் நாளுக்குநாள் விஸ்வரூபம் எடுத்து வருகிறது.

    இது தொடர்பாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் முகமது சபீர் ஆலம் விசாரணை நடத்தி வரும் நிலையில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது.

    இதுவரை இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்ட உதவி போலீஸ் சூப்பிரண்டு பல்வீர்சிங் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டு பணியிட நீக்கம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன், மாவட்ட உளவு பிரிவு இன்ஸ்பெக்டர் உட்பட 4 இன்ஸ்பெக்டர், தனிப்பிரிவு உதவியாளர், தனிப்பிரிவு போலீசார் என 10-க்கும் மேற்பட்டோர் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

    இதற்கிடையே கடந்த 30-ந்தேதி கொல்கத்தாவை சேர்ந்த ஆசிஸ் கோவில் என்ற வக்கீல், அம்பை பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்ட செல்லப்பா உள்ளிட்டோர் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையத்தில் மனு அளித்து அந்த வழக்கும் நிலுவையில் உள்ளது.

    இந்நிலையில் வி.கே.புரம் பகுதியை சேர்ந்த வேதநாராயணன் என்பவர் பல் பிடுங்கப்பட்ட விவகாரத்தில் பாதிக்கப்பட்டது தொடர்பாக சென்னையை சேர்ந்த ரவி சந்தோஷ் என்பவர் தேசிய மனித உரிமை ஆணையத்தில் மேலும் ஒரு புகார் மனு தாக்கல் செய்துள்ளார்.

    இதேபோல் அம்பை காவல் உட்கோட்ட பகுதிகளில் உள்ள போலீஸ் நிலையங்களில் நடந்த சித்திரவதை தொடர்பாக ஐதராபாத்தை சேர்ந்த ஒருவர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் இதுவரை 3 மனுக்கள் தேசிய மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்து வழக்கு நிலுவையில் உள்ளது.

    Next Story
    ×