என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
குடிசையில் வாழும் மாணவர்களும் மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு தான் காரணம்- பொன். ராதாகிருஷ்ணன் பேட்டி
- தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
- அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை மாதாக்கோட்டை அடுத்துள்ள துலுக்கன்பட்டி கிராமத்தில் பாஜ.க. தெற்கு மாவட்ட பொருளாதார பிரிவு சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
விழாவில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் 16,000 பள்ளிகள் இருந்த நிலையில் அதை 32 ஆயிரம் பள்ளிகளாக மாற்றியவர் காமராஜர். 100-க்கு 7 பேர் படித்த நிலையில் அதை 37 பேராக மாற்றியவர் காமராஜர். ஆனால் தமிழகத்தில் இன்றைக்கு ஆயிரக்கணக்கான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. அரசு பள்ளி மூடப்படுகிறது என்று சொன்னால், காமராஜரின் இலவச கல்வியும் மூடப்படுகிறது. ஏழை மக்களின் எதிர்காலமும் மூடப்படுகிறது.
பொதுவாக எல்லா விஷயங்களுக்கும் சாதகங்கள் , பாதகங்கள் என்பது குறித்த வாதங்கள் நடந்து கொண்டுதான் இருக்கும். பொது சிவில் சட்டம் பற்றிய மசோதாவே வெளியாகாத முன்பு தவறு என்பது கூறுவது எந்த விதத்தில் நியாயம்.
தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்குப் பிறகு காங்கிரஸ் கட்சி இல்லாமல் போய்விட்டது.
தி.மு.க. மக்களுக்கு நன்மையான ஏதாவது ஒரு திட்டத்தை ஒன்றை வேண்டுமென்று கூறியுள்ளதா?எல்லாமே வேண்டாம் என தான் கூறி வருகிறது. நீட் தேர்வு வேண்டாம் என கூறினார்கள். சாதாரணமாக குடிசையில் வாழக்கூடியவர்களின் குழந்தைகள், மருத்துவக் கல்லூரியில் அட்மிஷன் வாங்குகின்றனர். கற்பனை செய்து தான் பார்க்க முடியுமா? நீட் தேர்வு வராவிட்டால், ஏழை மாணவர்களுக்கு சீட் கிடைத்திருக்க வாய்ப்பில்லை.
காங்கிரஸ் கட்சித் தமிழக தலைவர் கே.எஸ். அழகிரி, தமிழக முதலமைச்சரை உடனடியாக அழைத்துக் கொண்டு, பெங்களூருக்கு சென்று மேகதாதுவில் அணை கட்ட விடமாட்டோம் என்கிற நிலைப்பாட்டையும் சொல்லி, கர்நாடகம் மேகதாதுவில் அணை கட்டாது என்பதையும் உறுதிப்படுத்தி வர வேண்டும் .
இவ்வாறு அவர் கூறினார்