search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 12:20 PM IST

      பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதை அடுத்து இன்றைய சட்டசபை கூட்டம் நிறைவு பெற்றது. நாளை காலை மீண்டும் சட்டசபை கூடும் என சபாநாயகர் அறிவித்தார்.

    • 19 Feb 2024 12:18 PM IST

      2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை 2 மணிநேரத்திற்கும் மேலாக வாசித்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு.

    • 19 Feb 2024 12:16 PM IST

      அரசின் வருவாய் பற்றாக்குறை ரூ.44,907 கோடியாக அதிகரித்துள்ளது. நிதிப் பற்றாக்குறை ரூ.1,08,690 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.46 சதவீதம். கடும் சவால்களுக்கு இடையிலும் நிதி பற்றாக்குறையை அரசு குறைத்துள்ளது- நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு உரை

    • 19 Feb 2024 12:14 PM IST

      கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், திருவான்மியூர் முதல் உத்தண்டி வரை உயர்மட்ட சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்படும்- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 11:57 AM IST

      தேசிய பேரிடர் நிவாரணத்திலிருந்து எந்த நிதியும் தற்போது வரை விடுவிக்கவில்லை- அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 11:56 AM IST

      மாநில அரசு கடன் பெற மத்திய அரசு கடும் நிபந்தனைகள் விதிப்பதால் வளர்ச்சி திட்டங்கள் பாதிப்பு- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 19 Feb 2024 11:56 AM IST

      மத்திய அரசு ஒப்புதல் தராததால் மெட்ரோ ரெயில் திட்டத்துக்கு ரூ.9,000கோடி கூடுதல் செலவு- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 19 Feb 2024 11:55 AM IST

      வானிலையை துல்லியமாக கணிக்க 2 புதிய டாப்ளர் ரேடார்கள் அமைக்கப்படும்- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 19 Feb 2024 11:55 AM IST

      ஜிஎஸ்டி-யால் ஒரு ஆண்டுக்கு தமிழகத்திற்கு 20,000 கோடி வருவாய் இழப்பு- பட்ஜெட்டில் அறிவிப்பு

    • 19 Feb 2024 11:51 AM IST

      திருச்சி, திருவெறும்பூர் பகுதியில் நவீன பாதுகாப்பு வசதியுடன் புதிய சிறைச்சாலை அமைக்கப்படும்.

    Next Story
    ×