search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழக பட்ஜெட்டின் முக்கிய அம்சங்கள்...

    • இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.
    • பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    சென்னை:

    தமிழக சட்டசபையின் இந்த ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த 12-ந் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது.

    இந்தநிலையில் சட்டசபையில் இன்று 2024-2025-ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக தாக்கல் செய்தார்.

    அதற்கான லோகோவை தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ளது. அதில், "தடைகளைத் தாண்டி.. வளர்ச்சியை நோக்கி.." என்ற தலைப்பில் லோகோ வெளியிடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 19 Feb 2024 10:08 AM IST

      வரவு- செலவு திட்டத்திற்கு வழிகாட்டி அண்ணா- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 10:05 AM IST

      நாட்டின் இரண்டாவது பொருளாதாரம் கொண்ட மாநிலம் தமிழ்நாடு

    • 19 Feb 2024 10:05 AM IST

      முதலமைச்சரின் வழிகாட்டுதல் அடிப்படையில் பட்ஜெட் தாகக்ல் செய்யப்படுகிறது- நிதியமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 10:03 AM IST

      தமிழக சட்டசபை தொடங்கியது... திருக்குறளை மேற்கொள்காட்டி பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கினார் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு

    • 19 Feb 2024 9:47 AM IST

      தமிழக கடன் நிலை, வருவாய் பற்றாக்குறை, நிதிப்பற்றாக்குறை பற்றிய அறிப்புகள் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

    • 19 Feb 2024 9:47 AM IST

      தமிழக பட்ஜெட்டில் 7 முக்கிய அம்சங்கள் வெளியாகும் என தகவல்.

    • 19 Feb 2024 9:46 AM IST

      பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என கூறப்படுகிறது.

    • 19 Feb 2024 9:46 AM IST

      தி.மு.க. தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட கேஸ் மானியம் உள்ளிட்டவை பட்ஜெட்டில் இடம்பெறுமா? என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×