என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நாளை ஆளுநர் வருகை- கொடைக்கானல் மலைச்சாலையில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை
- கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது.
- 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
திண்டுக்கல்:
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி நாளை (14ம் தேதி) கொடைக்கானல் வருகை தருகிறார். நாளை சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வரும் அவர் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் வருகை தருகிறார்.
கொடைக்கானல் கோகினூர் மாளிகையில் தங்கும் அவர் நாளை மறுதினம் (15ம் தேதி) அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் நடக்கும் கருத்தரங்கில் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றுகிறார். அன்று கொடைக்கானலில் ஓய்வெடுக்கும் ஆளுநர் ஆர்.என்.ரவி 16ம் தேதி காலை கார்மூலம் மதுரை சென்று பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
இதனை முன்னிட்டு இன்று முதல் கொடைக்கானல் மலைச்சாலை மற்றும் ஆளுநர் தங்கும் மாளிகை உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு மற்றும் மோப்பநாய் சோதனை நடைபெறுகிறது. டி.ஐ.ஜி. அபினவ்குமார் தலைமையில் எஸ்.பி.க்கள் பாஸ்கரன் (திண்டுக்கல்), பிரவீன் உமேஸ் டோங்கரே (தேனி), 2 ஏ.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.
ஆளுநர் ஆர்.என்.ரவி செல்லும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் மலைச்சாலையில் முக்கிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். மேலும் மோப்பநாய் கொண்டும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
இதனை முன்னிட்டு இன்று மதியம் 2 மணிமுதல் மாலை வரையிலும், வருகிற 16ம் தேதி காலை 9 மணிமுதல் மதியம் 12 மணிவரையிலும் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலை வழியாக மேலே செல்வதற்கும், மேலிருந்து கீழே இறங்குவதற்கும் அனுமதி இல்லை. போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் அனைத்து வாகனங்களும் பழனி-பெருமாள்மலை வழியாக கொடைக்கானலுக்கு செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலில் உள்ள தங்கும் விடுதிகளிலும் சந்தேகப்படும்படியான நபர்கள் யாரேனும் தங்கி உள்ளனரா என்றும் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்