search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வேளச்சேரி கட்டிட விபத்து: 2 பேரை கைது செய்து கிண்டி போலீசார் விசாரணை
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    வேளச்சேரி கட்டிட விபத்து: 2 பேரை கைது செய்து கிண்டி போலீசார் விசாரணை

    • தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது.
    • பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு பேரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது.

    சென்னை :

    வேளச்சேரி ஐந்து பர்லாங் சாலை பகுதியில் உள்ள கேஸ் பங்க் அருகே நடைபெற்று வந்த தனியார் கட்டுமான பகுதியில் கடந்த திங்கட்கிழமை அன்று சுமார் 50 அடிக்கும் மேல் திடீரென பள்ளம் ஏற்பட்டது. இந்த பள்ளத்தில் அங்கு வைக்கப்பட்டு இருந்த கண்டெய்னர் மற்றும் ஜே.சி.பி. இயந்திரமும் விழுந்ததாக கூறப்பட்டது. இதில் பெட்ரோல் பங்கில் பணியாற்றி வந்தவர்கள் என 8 பேர் சிக்கிக் கொண்டனர். இதில் 6 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

    பெரும் பள்ளத்தில் சிக்கிக் கொண்ட இரண்டு பேரை மீட்கும் பணிகள் கடந்த 5 நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதில் 2 பேர் இன்று சடலமாக மீட்கப்பட்டனர்.

    இந்நிலையில், இந்த கட்டிட விபத்து தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    கட்டுமான பணியின்போது உரிய பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற தவறிய மேற்பார்வையாளர்கள் எழில் மற்றும் சந்தோஷ் ஆகியோரை கிண்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×