என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
நான் குணமடைய வாழ்த்திய பிரதமர், முதலமைச்சருக்கு நன்றி- ரஜினிகாந்த்
- ரஜினிகாந்த் உடல்நிலை குணமாகி இன்று காலை மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
- நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி கூறி நடிகர் ரஜினிகாந்த் பதிவு வெளியிட்டுள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திறகு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் கடந்த மாதம் 30-ந்தேதி சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள அப்பல்லோ மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மகா தமனி வீக்கத்தை முற்றிலும் சரிசெய்யும் வகையில் 'ஸ்டென்ட்' -ஐ அந்த இடத்தில் பொருத்தி சிகிச்சை அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து ரஜினியை ஐசியூ-வில் வைத்து கண்காணித்து வந்த நிலையில், அவர் உடல்நிலை குணமாகி இன்று காலை மருத்தவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார்.
இந்நிலையில், நலம் விசாரித்தவர்களுக்கு நன்றி கூறி நடிகர் ரஜினிகாந்த் பதிவு வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நான் மருத்துவமனையில் இருக்கும் போது, நான் சீக்கிரம் உடல் நலம் பெற என்னை வாழ்த்திய அனைத்து அரசியல் நண்பர்களுக்கும், திரைப்பட துறையை சார்ந்தவர்களுக்கும், எனது அனைத்து நண்பர்களுக்கும், நலவிரும்பிகளுக்கும். பத்திரிகை நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
மற்றும் நான் நலம் பெற பிராத்தனைகள் செய்த, மனதார வாழ்த்திய என்மீது அளவில்லா அன்பு வைத்திருக்கும் என்னை வாழவைக்கும் தெய்வங்களான ரசிகர்களுக்கும், அனைத்து மக்களுக்கும் எனது உளமார மனமார்ந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தவிர, தனது நலன் குறித்து விசாரித்த பிரதமர் நரேந்திர மோடி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன் என ரஜினிகாந்த் தனது எக்ஸ் பக்கத்தில் தனித்தனி பதிவுகளாக குறிப்பிட்டு பகிர்ந்துள்ளார்.
— Rajinikanth (@rajinikanth) October 4, 2024