search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    40க்கு 40ம் வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி - முதல்வர் மு.க.ஸ்டாலின்
    X

    40க்கு 40ம் வெற்றி பெற வைத்த தமிழக மக்களுக்கு நன்றி - முதல்வர் மு.க.ஸ்டாலின்

    • தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.
    • இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    பாராளுமன்ற தேர்தல் முன்னிலை நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.

    மொத்தமுள்ள 543 பாராளுமன்ற தொகுதிகளில் 290 தொகுதிகளில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. இந்தியா கூட்டணி 235 இடங்களில் முன்னிலையில் உள்ளது.

    ஆட்சியமைக்க 273 இடங்கள் தேவைப்படும் நிலையில் பாஜகவுக்கு தனி பெரும்பான்மை கிடைக்காத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் கூட்டணி ஆட்சி அமையவே வாய்ப்புள்ளதால் யார் ஆட்சி அமைப்பார்கள் என்பதில் இழுபறி ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் திமுக கூட்டணி அபார வெற்றி பெற்றுள்ளது.

    தேர்தல் வெற்றி தொடர்பாக இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செந்தியாவார்களைச் சந்தித்து பேசினார். அப்போது, "கடந்த பாராளுமன்ற தேர்தலில் 39 தொகுதிகளில் வெற்றி பெற்றோம். இந்த தேர்தலில் மீதமிருந்த 1 தொகுதியையும் சேர்த்து 40க்கு 40 வெற்றி பெற வைத்திருக்கிறார்கள். இந்த வெற்றியை தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குகிறேன். தமிழ்நாட்டு மக்கள். அனைவருக்கும் நன்றி.

    கருத்துக் கணிப்பு என்ற பெயரில் உளவியல் ரீதியிலான தாக்குதலை தொடுத்தது பாஜக. இருப்பினும், ஆட்சியமைக்க தேவையான இடங்களை பெற முடியாத அளவுக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது

    பாஜகவின் பண பலம், அதிகார துஷ்பிரயோகம், ஊடக பரப்புரை அனைத்தையும் உடைத்தெறிந்து நாம் பெற்றுள்ள மகத்தான வெற்றி, வரலாற்று சிறப்புமிக்க வெற்றியாக அமைந்துள்ளது" என்று அவர் தெரிவித்தார்.

    மேலும், இந்தியா கூட்டணி சார்பில் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படுவீர்களா என்று பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு "என் உயரம் எனக்கு தெரியும்" முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.

    Next Story
    ×