என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புதிய வானம் புதிய பூமி
- அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார்.
- கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
அன்பே வா திரைப்படத்தில் எம்.ஜி.ஆர். புதிய வானம் புதிய பூமி... எங்கும் பனிமழை பொழிகிறது நான் வருகையிலே என்னை வரவேற்க வண்ண பூ மழை பொழிகிறது என்று பாடிக் கொண்டே உற்சாகத்தில் ஆடுவார்.
அவர் தொடங்கிய அ.தி.மு.க.வை வழிநடத்த பொதுச்செயலாளர் பொறுப்பை ஏற்று இருக்கும் எடப்பாடி பழனிசாமியும் இன்று அதேபோல் உற்சாக மனநிலைக்கு வந்திருக்கிறார். சட்டப் போராட்டங்களில் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக தொடர் வெற்றி பெற்ற அவர் தற்போது தேர்வாணையத்திலும் வெற்றி பெற்றிருக்கிறார். அவர் அனுப்பிய கட்சி சட்டத் திருத்தங்கள், புதிய சேர்க்கைகள் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் தலைமை தேர்தல் ஆணையம் அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறது. அதோடு அதிகாரப்பூர்வ இணையதளத்திலும் அவற்றை தேர்தல் ஆணையம் வெளியிட்டிருக்கிறது.
இதன்மூலம் எடப்பாடி பழனிசாமி தலைமை உறுதி படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி தோல்வி அடைந்திருப்பதால் அவர் மீதான பா.ஜ.க. தலைவர்களின் அணுகு முறையிலும் மாற்றம் ஏற்பட்டு இருக்கிறது.
எடப்பாடி பழனிசாமியிடம் இனி மென்மையாகத் தான் செல்ல வேண்டும் என்ற நிலை பா.ஜ.க. தலைவர்கள் மத்தியில் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனால் எடப்பாடி பழனிசாமி இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்.
இந்த மகிழ்ச்சியை தக்க வைத்துக்கொள்ள அடுத்த அதிரடி நடவடிக்கைகளுக்கு எடப்பாடி பழனிசாமி ஓசையின்றி தயாராகி வருகிறார். விரைவில் அ.தி.மு.க.வின் நிர்வாக அமைப்புகளில் மாற்றம் வரப்படலாம் என்கிறார்கள். தமிழகத்தின் அனைத்து பகுதி தலைவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பதவிகளை பிரித்து வழங்க எடப்பாடி பழனிசாமி ஆலோசித்துக் கொண்டிருக்கிறார்.