search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு
    X

    பத்திரமாக தரையிறங்கிய விமானம்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் பாராட்டு

    • தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து விமானம் திருச்சிக்கே திரும்பியது.
    • ஒரு மணி நேரமாக வானத்தில் வட்டமடித்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

    திருச்சியில் இருந்து சார்ஜா புறப்பட்ட விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, விமானம் திருச்சிக்கே திரும்பியது.

    141 பயணிகளுடன் திருச்சியில் இருந்து புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தரையிறங்க முடியாமல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக வானத்தில் வட்டமடித்த நிலையில், விமானம் பத்திரமாக தரையிறங்கியது. விமானம் பத்திரமாக தரையிறக்கிய விமானிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் பத்திரமாக தரையிறங்கியதைக் கேள்விப்பட்டு மனம் நெகிழ்ந்தேன். தரையிறங்கும் கியரில் பிரச்சினை பற்றிய செய்தி கிடைத்ததும், நான் உடனடியாக தொலைபேசியில் அதிகாரிகளுடன் அவசரக் கூட்டத்தை ஒருங்கிணைத்து- தீயணைப்பு இயந்திரங்கள், ஆம்புலன்ஸ்கள் மற்றும் மருத்துவ உதவிகளை அனுப்புவது உட்பட தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளையும் செயல்படுத்த அறிவுறுத்தினேன்."

    "மேலும் அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யவும், உதவிகளை வழங்கவும் மாவட்ட ஆட்சியருக்கு நான் இப்போது உத்தரவிட்டுள்ளேன். பாதுகாப்பாக தரையிறங்கிய கேப்டன் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுகள்," என்று குறிப்பிட்டுள்ளார்.


    Next Story
    ×