என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது விதிமீறல்: சென்னையில் 932 வாகனங்கள் பறிமுதல்
- அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.
- சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது.
சென்னை:
உலகம் முழுவதும் ஆங்கில புத்தாண்டு 2023ஐ மக்கள் உற்சாகமாக வரவேற்றனர். பொது இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றன. புத்தாண்டு கொண்டாட்டங்களில் அசம்பாவிதங்களை தவிர்க்கும் வகையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. சென்னையில் நேற்று இரவு 8 மணிக்கு மேல் கடற்கரைகளின் மணற் பரப்புகளில் பொதுமக்கள் கூட தடை விதிக்கப்பட்டது. தடையை மீறி கூடினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தினர்.
இந்த நிலையில், சென்னையில், புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது விதிமீறலில் ஈடுபட்டதாக 932 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 360 வாகனங்களும், இதர விதிமீறல்களில் ஈடுபட்டதாக 572 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.