search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டிராவல்ஸ் அதிபர் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டினார்- ஆசிரியை குற்றச்சாட்டு
    X

    ஆசிரியை ஹசல் ஜேம்ஸ்.

    டிராவல்ஸ் அதிபர் இரவு நேரங்களில் செல்போனில் ஆபாசமாக பேசி மிரட்டினார்- ஆசிரியை குற்றச்சாட்டு

    • இரவு நேரங்களில் போன் செய்து என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி பணம் கேட்டு மிரட்டுகிறார்.
    • விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    குனியமுத்தூர்:

    மும்பை செம்பூரில் வசிக்கும் டிராவல்ஸ் நிறுவன அதிபர் ராஜேஷ் (வயது 44) கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவை போத்தனூர் போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் கொடுத்தார்.

    அதில் போத்தனூர் நாராயணா கார்டனைச் சேர்ந்த ஹசல் ஜேம்ஸ் (27) என்ற தனியார் பள்ளி ஆசிரியை தன்னிடம் ரூ.20 லட்சம் மோசடி செய்துவிட்டதாக தெரிவித்து இருந்தார்.

    கடந்த 2020-ம் ஆண்டு கோவையில் வசிக்கும் எனது உறவினரை பார்க்கச் சென்றேன். அப்போது எனது உறவினர் மூலம் ஹேசல் ஜேம்ஸ் அறிமுகம் ஆனார். அதன்பிறகு அடிக்கடி செல்போனில் பேசி வந்தோம். அவரது கணவர் இறந்துவிட்டார் எனவும், 2 குழந்தைகளை வைத்து கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தார். மேலும் என்னிடம் உதவி கேட்டார். நானும் ரூ.90 ஆயிரம் ரொக்கப்பணம் மற்றும் கார், செல்போன் போன்றவை வாங்கிக் கொடுத்தேன். அவற்றின் மொத்த மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும். இந்தநிலையில் அவரது கணவர் இறக்கவில்லை என்பதும், விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து நான் கொடுத்த பணம் பொருட்களை திருப்பிக்கேட்டேன். ஆனால் பணம் கொடுக்க மறுத்து தற்கொலை மிரட்டல் விடுக்கிறார் என புகாரில் தெரிவித்து இருந்தார். அதன்பேரில் ஹேசல் ஜேம்ஸ் மீது மோசடி உள்ளிட்ட பிரிவுகளின் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்நிலையில் ஹசல் ஜேம்ஸ், போத்தனூர் போலீஸ் நிலையத்தில் டிராவல்ஸ் அதிபர் ராஜேஷ் மீது மற்றொரு புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில் கூறியிருப்பதாவது:-

    எனக்கும், தர்மதுரை என்பவருக்கும் திருமணம் நடந்தது. பின்னர் எங்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாங்கள் இருவரும் பிரிந்துவிட்டோம்.

    நான் எனது தந்தை வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறேன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எனக்கு இன்ஸ்டாகிராம் மூலம் மும்பையை சேர்ந்த டிராவல்ஸ் அதிபரான ராஜேஷ் என்பவர் அறிமுகம் ஆனார்.

    அவரிடம் நட்பாக பழகி வந்தேன். நான் சொந்தமாக அழகு சாதன பொருட்கள் மற்றும் கார்மெண்ட்ஸ் நடத்தி வருவதாக அவரிடம் கூறினேன். அவர் நாம் 2 பேரும் சேர்ந்து இந்த தொழிலை நடத்தலாம் என தெரிவித்தார்.

    அதன்படி 2 பேரும் சேர்ந்து தொழில் செய்து வந்தோம். அவர் மும்பையில் இருந்து பொருட்களை வாங்கி இங்கு அனுப்பி வைப்பார். நான் அதனை விற்பனை செய்து வந்தேன். இது தொடர்பாக அடிக்கடி போனில் பேசி வந்தோம்.

    இந்நிலையில் நாட்கள் செல்ல, செல்ல ராஜேஷ் என்னிடம் ஆபாசமாக பேச தொடங்கினார். நான் அதனை கண்டித்தேன். இருப்பினும் அவர் அப்படியே பேசி வந்தார். இதனால் நான் அவருடன் பேசுவதையும், பழகுவதையும் தவிர்த்து வந்தேன்.

    நான் பேசாதததால் அவர் எனக்கு கொடுத்த பணத்தை கேட்டு தினமும் மிரட்டல் விடுக்கிறார். மேலும் இரவு நேரங்களில் போன் செய்து என்னிடம் ஆபாசமான வார்த்தைகளால் பேசி பணம் கேட்டு மிரட்டுகிறார்.

    இதுகுறித்து எனது கணவரிடமும் கூறியுள்ளார். அவரும் எனக்கு போன் செய்து தகாத வார்த்தைகளால் பேசி மிரட்டல் விடுக்கிறார்.

    எனவே அவர்கள் 2 பேர் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அந்த புகாரில் கூறியிருந்தார்.

    புகாரின் பேரில் போலீசார் ராஜேஷ் மீது ஆபாசமாக பேசுதல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடத்தவும் போலீசார் திட்டமிட்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×