என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
சுற்றுலா வளர்ச்சிக்காக புதுச்சேரிக்கு, ரூ.148 கோடி ஒதுக்கீடு- மத்திய மந்திரி பேச்சு
- சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி உள்ளோம்.
- அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
புதுச்சேரியில் பாரம்பரிய சுற்றுலா, கடற்கரை சுற்றுலா, ஆன்மீகச் சுற்றுலா மேம்பாட்டுக்கான நான்கு திட்டங்களை மத்திய மந்திரி கிஷன் ரெட்டி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேசிய அவர், கூறியுள்ளதாவது:
ஆண்டின் 365 நாட்களும் சுற்றுலா செல்ல உகந்த நாடு இந்தியா என்பதை உலகுக்கு உணர்த்தி வருகிறோம். சுற்றுலாத்துறை பொருளாதார மேம்பாட்டுக்கு உதவுகிறது. ஒட்டு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் அந்நிய செலாவணி இருப்பிலும் சுற்றுலாத் தொழில் முக்கியப் பங்கு வகிக்கிறது.
பத்து லட்சம் ரூபாய் முதலீட்டில் சுற்றுலாத் தொழில் தொடங்கினால் 80 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். பிரதமர் மோடி தலைமையிலான அரசு சுற்றுலா வளர்ச்சிக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. ஆன்மீகத் தலமாக புதுச்சேரி உள்ளது. ஆன்மீகச் சுற்றுலா சிறப்பாக உள்ள இங்கு, சுகாதார சுற்றுலாவையும் கல்வி சார்ந்த முதலீடுகளையும் மேம்படுத்த வாய்ப்பு உள்ளது. புதுச்சேரியில் சுற்றுலா வளர்ச்சிக்காக 148 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய துணை நிலை ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன், சுற்றுலா பயங்கரவாதப் போக்கை தடுக்கும் என்று பிரதமர் மோடி தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக கூறினார். புதுவையின் புதுமைக்கு சுற்றுலா அடித்தளமாக இருக்கிறது, மத்திய அரசின் முயற்சியால் புதுச்சேரி விரைவில் சிறந்த சுற்றுலா நகரமாக விளங்கும் என்று குறிப்பிட்டார். புதுச்சேரி முதலமைச்சர் ரெங்கசாமி மற்றும் அமைச்சர்கள் உள்பட பலர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.