search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    விக்கிரவாண்டி இடைத்தேர்தல்... தி.மு.க. வேட்பாளர் அபார வெற்றி- லைவ் அப்டேட்ஸ்

    • இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது.
    • வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த 10ம் தேதி 276 வாக்குச்சாவடிகளில் நடைபெற்றது.

    இத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் டாக்டர் அபிநயா உள்பட 29 வேட்பாளர்கள் தேர்தல் களத்தில் போட்டியில் உள்ளனர்.

    இத்தொகுதியில் மொத்தம் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்துள்ளனர். இதன் வாக்குப்பதிவு சதவீதம் 82.47 ஆகும்.

    இதனிடையே அனைத்து வாக்குச்சாவடி மையங்களில் இருந்தும் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குப்பதிவு நடைபெற்ற அன்று இரவு, வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு அனுப்பி வைத்து, அறையை பூட்டி சீல் வைத்தார்.

    இந்நிலையில் இன்று காலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    அதன்படி இன்று காலை 6 மணிக்கு வாக்கு எண்ணுவதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு ஒவ்வொரு வாக்குச்சாவடி வாரியாக மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டது.

    சரியாக காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. அதன் பிறகு 30 நிமிடங்கள் கழித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவாகியுள்ள வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கப்படுகிறது. இதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டு வாக்கு எண்ணிக்கை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    இத்தொகுதியில் வாக்கு எண்ணிக்கை 20 சுற்றுகளாக நடைபெற உள்ளது. ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் ஒலிப்பெருக்கி மூலம் அறிவிக்கப்படும்.

    இந்த வாக்கு எண்ணும் மையத்தை சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Live Updates

    • 13 July 2024 10:18 AM IST

      3வது, 4வது சுற்றுகள் முடிவடைந்த நிலையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    • 13 July 2024 9:49 AM IST

      2வது சுற்று முடிவில், அன்னியூர் சிவா 17,492 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். பாமக வேட்பாளர் சி.அன்புமணி 8,500 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா 570 வாக்குகளும் பெற்று பின்னடைவில் உள்ளனர்.

    • 13 July 2024 9:46 AM IST

      2வது சுற்று முடிவடைந்த நிலையில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா தொடர்ந்து முன்னிலையில் உள்ளார்.

    • 13 July 2024 9:45 AM IST

      வாக்கு எண்ணும் பணியில் 3வது சுற்று வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.

    • 13 July 2024 8:57 AM IST

      முதல் சுற்று முடிவில், பாமக வேட்பாளர் 3,096 வாக்குகளும், நாதக வேட்பாளர் 320 வாக்குகளும் பெற்று பின்னடைவில் உள்ளனர்.

    • 13 July 2024 8:55 AM IST

      திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 5,864 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

    • 13 July 2024 8:53 AM IST

      பாமக வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா தொடர்ந்து பின்னடைவில் இருந்து வருகின்றனர்.

    • 13 July 2024 8:52 AM IST

      தபால் வாக்குகள் எண்ணும் பணி ஒரு புறமும், இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒரு புறமும் தொடர்ந்து எண்ணப்பட்டு வருகிறது.

    • 13 July 2024 8:51 AM IST

      விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்கு எண்ணும் பணியில் முதல் சுற்று நிறைவடைந்து 2ம் சுற்று தொடங்கியது.

    • 13 July 2024 8:34 AM IST

      ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை கண்காணிக்கப்படுகிறது.

    Next Story
    ×