search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மழை சீசனால் ஈசலை பிடித்து உண்ணும் கிராம மக்கள்
    X

    ஈசலை உலற வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    மழை சீசனால் ஈசலை பிடித்து உண்ணும் கிராம மக்கள்

    • ஈசலை பிடிப்பதற்கென்றே பயிற்சி எடுத்த பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • வருகின்றனர். 1 படி ஈசல் ரூ.150க்கு தற்போது விற்கப்பட்டு வருகிறது.

    வேடசந்தூர்:

    தமிழகத்தில் கடந்த 1 வாரத்துக்கும் மேலாக கன மழை பெய்து வருகிறது. ஆடி மாதத்தில் தொடங்கிய மழை தற்போது ஆவணி மாதத்திலும் நீடித்து வருவதால் விவசாயிகள் ஒரு புறம் மகிழ்ச்சியும், மற்றொரு புறம் கவலையுமடைந்துள்ளனர்.

    ஆடிப்பட்டம் தேடி விதை என்பதை போல ஆவணி மற்றும் புரட்டாசி மாதங்களில் புற்றுகளில் இருந்து ஈசல் பிடிப்பது பல்வேறு கிராமங்களில் இன்று வரை தொடர்ந்து நடந்து வருகிறது.

    இந்த ஈசலை பிடிப்பதற்கென்றே பயிற்சி எடுத்த பலர் இதில் ஈடுபட்டு வருகின்றனர். இரவு நேரங்களில் காட்டுப்பகுதியில் உள்ள புற்றுகளின் முன்னால் குழியைத் தோண்டி காண்டா விளக்கை ஏற்றி வைத்து ஈசலை பிடித்து வருகின்றனர்.

    விளக்கின் வெளிச்சத்துக்கு ஈசல் வெளிவரும்போது புற்றின் மீது கிளா, பாஞ்சா வேர் பொடிகளைத் தூவுகின்றனர். அந்த வாசனைக்கு வேகமாக வெளியில் வரும் ஈசல்களில் பைகளில் பிடித்து சேகரிக்கின்றனர். அதனை காய வைத்து தேன், மாவு உள்ளிட்ட பொருட்களுடன் கலந்து உணவாக உட்கொள்கின்றனர்.

    மேலும் ஈசல்களை காயவைத்து உப்பு போட்டு பதப்படுத்தி வைத்து அதன்பிறகு சோளம், கம்பு, வறுத்த சுக்கு, மிளகு கலந்து அரைத்து நாட்டுச்சர்க்கரையுடன் ஈசலை கலந்து உண்ணுகின்றனர். இந்த கலவை 6 மாதங்கள் வரை கெட்டுப்போகாமல் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.

    மழைக்காலங்களில் மட்டுமே ஈசல் பிடிக்கும் பணியில் ஈடுபடும் கிராம மக்கள் இரவு நேரங்களில் புற்றுகள் அருகில் அமர்ந்திருக்கும்போது சில சமயம் பாம்புகள் வந்து விடும் என்கின்றனர். இதனால் அருகிலேயே வெளிச்சம் வைத்து அமர்ந்திருந்து ஈசல் பிடிக்கின்றனர். ஈசலில் புரோட்டின் சத்து உள்ளதாகவும், இது உடலுக்கு வலு சேர்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர். சீசன் காலங்களில் இதனை உலற வைத்து விற்பனை செய்தும் வருவாய் ஈட்டி வருகின்றனர். 1 படி ஈசல் ரூ.150க்கு தற்போது விற்கப்பட்டு வருகிறது.

    ஈசலை உலற வைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    Next Story
    ×