search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜெயலலிதா இருந்திருந்தால்...நீட் தேர்வு விவகாரம் குறித்து வி.கே.சசிகலா
    X

    ஜெயலலிதா இருந்திருந்தால்...நீட் தேர்வு விவகாரம் குறித்து வி.கே.சசிகலா

    • அ.தி.மு.க. ஒருங்கிணைப்பில் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
    • ஜெயலலிதாவின் புகைப்படம் தற்போது பலருக்கும் தேவைப்படுகிறது என்றார் வி.கே.சசிகலா.

    சென்னை:

    சென்னையில் வி.கே.சசிகலா செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தில் 60-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதேபோன்று அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் நிகழ்ந்தபோது, ஜெயலலிதா எடுத்த நடவடிக்கையால் அதன்பிறகு விஷ சாராய மரணங்கள் நிகழவில்லை. ஆனால், தி.மு.க. ஆட்சியில் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது.

    அ.தி.மு.க. ஒருங்கிணைப்பில் 90 சதவீதம் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பு தொடர்பாக விரைவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன்.

    ஜெயலலிதா ஆட்சியின்போது அரசியல் கட்சியினர் பலரும் விமர்சனம் செய்தனர். ஆனால் இன்று அனைவருக்கும் ஜெயலலிதாவின் புகைப்படம் தேவைப்படுகிறது. அதற்கு அவர் ஆற்றிய பணிகளே காரணம்.

    ஜெயலலிதா இருந்திருந்தால் காவிரி பிரச்சனைக்கு எப்படி நிரந்தர தீர்வு கொடுத்தாரோ, அதுபோல நீட் தேர்வு விவகாரத்திலும் நிரந்தர தீர்வை பெற்றுத் தந்திருப்பார்.

    நீட் விவகாரத்தில் தி.மு.க. போடுவது பகல் வேஷம். தி.மு.க.வினர் மக்களையும் வாக்களிப்பவர்களையும் பிச்சைக்காரர்களாகத்தான் நடத்துவார்கள். நாம் ஆட்சிக்கு வந்ததும் நீட்டை ஒழிக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுப்போம் என தெரிவித்தார்.

    Next Story
    ×